பகுரைனில் விளையாட்டு

பகுரைனில் விளையாட்டு (Sport in Bahrain) நாடு முழுவதும் பரவலாகவும் மிகப்பிரபலமாகவும் விளையாடப்படுகின்றன. பல்வேறு விளையாட்டுகள் இங்கு விளையாடப்பட்டாலும் கால்பந்து மிகமுக்கியமான விளையாட்டாக பிரபலமாகியுள்ளது. கூடைப்பந்து, கைப்பந்து, எறி பந்து முதலியவை மற்ற பிரபலமான பாரம்பரிய விளையாட்டுகளாகும். குதிரைப் பந்தயம், ரக்பி எனப்படும் அஞ்சல் பந்து முதலிய விளையாட்டுகள் கடந்த சில பத்தாண்டுகளில் பிரபலமடைந்து வருகின்றன.

கால்பந்து

தொகு

பகுரைன் தனது சொந்தநாட்டில் தொழில்முறை கால்பந்து சங்கங்கள் விளையாடுகின்ற முதல்நிலை பகுரைன் பிரீமியர் கூட்டமைப்புப் போட்டிகளை பகுரைன் தனது நாட்டில் நடத்துகிறது. இப்போட்டிகளில் 10 முதல்நிலை கால்பந்து சங்க அணிகள் ஒவ்வொரு அணியுடனும் இரண்டு சுற்றுகளாக முதலில் தொடர் சுழல் முறையில் விளையாடும். இதன்படி ஒவ்வொரு அணியும் 18 ஆட்டங்கள் விளையாடும். இப்போட்டியில் வெற்றி பெறும் அணி ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பைக்கான போட்டியில் விளையாடத் தகுதிபெறும்.[1]

நாட்டின் இரண்டாம் நிலை கால்பந்து சங்க அணிகளில் இருந்து முன்னேற்றம் மற்றும் புறக்கணிப்பு முறையில், பகுரைன் கால்பந்து கூட்டமைப்பு முதல்நிலை அணிகளை தேர்வு செய்கிறது. மற்ற கூட்டமைப்புப் போட்டிகளைப் போலவே இங்கும் பொதுவாக முதல்கட்ட போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் தொடங்கி மே மாதத்தில் முடிவுக்கு வருகிறது. 1952 ஆம் ஆண்டில் முதலாவது கூட்டமைப்புப் போட்டிகள் பகுரைனில் நடைபெற்றன. அணிகளுக்கான போட்டிகள் உள்ளூர் எதிர்த்து வெளியூர் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டன. அதாவது போட்டி நடைபெறும் இடம் உள்ளூர் ஆகும். அவ்வூர் அணியுடன் வேறு ஊரைச் சேர்ந்த அணி போட்டியில் விளையாடும். இருப்பினும் எல்லாப் போட்டிகளும் பகுரைன் தேசிய விளையாட்டரங்கத்தில் நடத்தப்பட்டுள்ளன.

பிரிவுகளில் கடைசியாக இடம்பிடிக்கும் அணி புறக்கணிக்கப்பட்டு அதற்கு மேலாக இருக்கும் அணி அடுத்தக்கட்ட முன்னேற்றம் புறக்கணிப்பு சுற்றுக்கு முன்னேறும். கூட்டமைப்புப் போட்டிகள் வரலாற்றில் மிகுந்த வெற்றிகளைச் சுவைத்த அணியாக அல்-முகர்ரக் கால்பந்து சங்க அணியாகும். தற்போது 2011- 2012 ஆம் ஆண்டிற்கான கூட்டமைப்புப் போட்டிகளில் இரிஃப்பா காற்பந்து சங்க அணி வெற்றி பெற்றது.[2]

 
பகுரைன் நாட்டின் தேசியக் கால்பந்து அணி ஆத்திரேலியா நாட்டு அணியுடன் உலகக் கோப்பைத் தகுதிச்சுற்று போட்டியில் சூன் 10 , 2009 அன்று விளையாடுகிறது.
சங்கம்
வாகையர் எண்ணிக்கை
முகர்ரக் சங்கம் 32
பகுரைன் இரிஃப்பா சங்கம் (மேற்கு இரிஃப்பா அடங்கியது) 10
பகுரைன் சங்கம் 5
அல்-அலில்லி 5
அராபி சங்கம் 1
அல் ஆலா 1
அல்-நாசர் 1
கிழக்கு இரிஃப்பா சங்கம் 1

கூடைப்பந்து

தொகு

பகுரைனில் தொழில்முறை கூடைப்பந்தாட்டக் கூட்டமைப்புப் போட்டிகளும் நடைபெறுகின்றன. 11 கூடைப்பந்தாட்டச் சங்கங்கள் இப்போட்டிகளில் விளையாடுகின்றன. ஒர் ஆண்டில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தங்கச் சதுரம் நிலைக்கு முன்னேறுகின்றன. அந்நிலையில் முதலிடம் பிடித்த அணி நான்காமிடம் பிடித்த அணியுடனும் இரண்டாமிடம் பிடித்த அணி மூன்றாமிடம் பிடித்த அணியுடனும், மூன்று முறை மோதல் வகை ஆட்டத்தில் ஆடுகின்றன, இதைத் தொடர்ந்து ஐந்து முறை மோதல் ஆட்டம் நிகழ்கிறது.

கூட்டமைப்புப் போட்டிகள் தவிர்த்து சையின் பகுரைன் கூடைப்பந்துக் கோப்பை என்ற மற்றொரு கூடைப்பந்துக் கோப்பையும் இங்கு நடைபெறுகிறது.[3] கூட்டமைப்புப் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இக்கோப்பையை வெல்ல மூன்று மோதல் வகையில் போட்டியிடும். கோப்பையை வெல்லும் அணி பகுரைன் நாட்டுக்காக ஆசிய சங்கங்களின் கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்கும். பூர்வாங்க கூட்டமைப்புப் போட்டிகளுக்கும் கோப்பைப் போட்டிக்கும் சையின் கொடையளிக்கிறது.[4]

ஒட்டு மொத்த கூட்டமைப்பு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் அணிக்கு, அடுத்த ஆண்டில் நடைபெறும் அராபியச் சங்க கூடைப்பந்து வாகையாளர் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கிறது[5]

அஞ்சல் பந்து

தொகு

எழுவர் அஞ்சல் பந்து ஆட்டம் மற்றும் அசல் அஞ்சல் பந்து ஆட்டங்கள் பகுரைனில் ஆடப்படுகின்றன. பகுரைனில் எழுவர் அஞ்சல் பந்திற்கான தேசிய அணியும் இருக்கிறது. இங்கு முதலாவது அஞ்சல் பந்து சங்கம், பிரித்தானிய சங்கத்தின் கிளையாக 1970 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்பொழுது அஞ்சல் பந்து கூட்டமைப்புப் போட்டிகளும் இங்கு நடைபெறுகின்றன.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Bahraini Premier League, Goalzz.com, retrieved on 15 June 2012.
  2. Riffa regains Bahrain Premier League crown, Gulf Daily News, retrieved on 15 June 2012.
  3. New Format for Basketball league. Gulf Daily News, dated 4 August 2009.
  4. Zain backs Bahrain Basketball League, Gulf Daily News. Dated 24 October 2010.
  5. 2012 Arabian Gulf Basketball Clubs Championship, Goalzz.com
  6. History பரணிடப்பட்டது 2015-07-10 at the வந்தவழி இயந்திரம். Bahrain Rugby Football Club, retrieved on 15 June 2012.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுரைனில்_விளையாட்டு&oldid=3219233" இலிருந்து மீள்விக்கப்பட்டது