பக்கர்வால்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

பக்கர்வால் மக்கள் (Bakarwal or Bakkarwal, Bakharwal, Bakrawala and Bakerwal) குஜ்ஜர் மக்களின் உட்பிரிவாகும்.[2] பக்கர்வால் மக்கள் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டம், மற்றும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம், ஆப்கானித்தானின் நூரிஸ்தான் மாகாணம் மற்றும் குனர் மாகாணங்களின் இமயமலைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.[3][4][5] பெரும்பான்மையான பக்கர்வால் மக்கள் இசுலாமும் மற்றும் சிறுபான்மையாக இந்து சமயம் பயில்கின்றனர். இந்தியாவில் மட்டும் 1991-ஆம் ஆண்டில் பக்கர்வால் மக்களை பட்டியல் பழங்குடியினர் வகுப்பில் வைத்துள்ளனர்.[5][6][7]இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடர் முதல் லடாக் வரை நாடோடி வாழ்க்கை நடத்தும் பக்கர்வால் மக்களின் முக்கியத் தொழில் புல்வெளிகளில் ஆடுகள் மேய்ப்பதே ஆகும்.

பக்கர்வால்
பக்கர்வால் ஜிர்கா மக்கள், ரஜௌரி மாவட்டம், ஜம்மு காஷ்மீர், இந்தியா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இந்தியா இந்தியா113,198 [1]
பாக்கித்தான் பாக்கித்தான்அறியப்படவிலை
ஆப்கானித்தான் ஆப்கானித்தான்அறியப்படவில்லை
மொழி(கள்)
குஜாரி, பக்கர்வாலி, பஷ்தூ, ஹிந்த்கோ, பகாரி-போத்வாரி மொழி
சமயங்கள்
பெரும்பான்மை: இசுலாம் (98.7%) [1]
சிறுபான்மை: இந்து சமயம் (2.3%) [1]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
குஜ்ஜர்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-31.
  2. Raha, Manish Kumar; Basu, Debashis (1994). "Ecology and Transhumance in the Himalaya". Ecology and Man in the Himalayas. New Delhi: M. D. Publications. பக். 33–48, pages 43–44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85880-16-7.  citing an unpublished paper by Negi, R. S. et al. "Socio-Economic Aspirations of Guijjara and Bakerwal"
  3. Khatana, Ram Parshad (1992). Tribal Migration in Himalayan Frontiers: Study of Gujjar Bakarwal Transhumance Economy. Gurgaon, India: South Asia Books (Vintage Books). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85326-46-7. 
  4. Sharma, Anita (2009). The Bakkarwals Of Jammu And Kashmir: Navigating Through Nomadism. தில்லி, India: Niyogi Publications (Niyogi Books). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89738-48-8. 
  5. 5.0 5.1 https://tribal.nic.in/downloads/CLM/CLM_1/17.pdf
  6. Bamzai, Sandeep (6 ஆகத்து 2016). "Kashmir: No algorithm for Azadi". Observer Research Foundation. Archived from the original on 10 August 2016.
  7. "List of Scheduled Tribes". Census of India: Government of India. 7 மார்ச்சு 2007. Archived from the original on 7 February 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கர்வால்&oldid=3853890" இலிருந்து மீள்விக்கப்பட்டது