பக்சு நாசிக்

உருதுக் கவிஞர்

இமாம் பக்சு நாசிக் (Baksh Nasikh ; 1776-1839) இலக்னோவை கவிதை மற்றும் புதுமைகளின் மையமாக ஊக்குவிப்பதில் தனது பங்கிற்காக குறிப்பிடப்பட்ட முகலாயர் காலத்தின் உருதுக் கவிஞர் ஆவார். இவர் முதலில் மீர் காசிம் அலியின் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெற்றார்.[1] 1830 களில் சக கசல் எழுத்தாளர் மற்றும் இலக்னோவி குவாஜா ஐதர் அலி ஆதிசுடன் நாசிக் ஒரு போட்டியை வளர்த்துக் கொண்டார்.[2] அயோத்தி நவாப்பின் ஆதரவை மறுத்த பிறகு, நாசிக் இலக்னோவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[3] பின்னர், அமைச்சர் அக்கீம் மெக்தி ஆட்சியில் இருந்தபோது தப்பி ஓடிய இவர், 1837 இல் மெக்தியின் மரணத்திற்குப் பிறகு நாடு திரும்பினார். இவர் 1839 இல் இலக்னோவில் இறந்தார்.[4] பகதூர் சா சாஃபரின் ஆட்சிக்காலம் வரை கசல் கவிதை கலை அதன் பழைய புகழுக்கு திரும்பியது, இப்போது தில்லியில் இது உயிர்ப்புடன் உள்ளது.[5]

பக்சு நாசிக்
பிறப்பு1771
பைசாபாத்
இறப்பு1838 (வயது 67)
இலக்னோ
புனைபெயர்நாசிக் (கையெழுத்துப் பிரதிகளை நகலெடுப்பவர்)
தொழில்உருதுக் கவிஞர்
தேசியம்இந்தியத் துணைக்கண்டம்
காலம்முகலாயப் பேரரசு
வகைகசல்
கருப்பொருள்அன்பு, மெய்யியல்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ravi Bhatt (24 September 2012). The Life and Times of the Nawabs of Lucknow. Rupa publications. p. 1837. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788129120878.
  2. IANS (8 February 2015). "A city of poets: Lucknow and its 'shayars' (Column: Bookends)". Business Standard India. https://www.business-standard.com/article/news-ians/a-city-of-poets-lucknow-and-its-shayars-column-bookends-115020800047_1.html. 
  3. Frances W. Pritchett (9 May 1994). Nets of Awareness: Urdu Poetry and its Critics. University of California Press. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520914278.
  4. Amir Hasan (1983). Palace Culture of Lucknow. B.R.Publishing Corporation. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789350500378.
  5. Amresh Datta (1987). The Encyclopaedia of Indian Literature Vol.2. Sahitya Akademi. p. 1396. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126018031.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்சு_நாசிக்&oldid=3846315" இலிருந்து மீள்விக்கப்பட்டது