பக்தி மார்க்கம்

பக்தி மார்க்கம் என்பது இந்து தொன்மவியலில் கூறப்படும் இரு மார்க்கங்களில் ஒன்றாகும். இறைவனை மனிதன் அடைய பக்தி மார்க்கம் உதவும் என்று வேதங்கள் கூறுகின்றன.

இம்மார்க்கத்தில் இறைவனுக்கு கோயில் கட்டுதல், கோயிலுக்கு குடமுழுக்கு செய்தல், இறைவனை உருவமாக வடிவமைத்து, அந்த இறைவுருவத்திற்கு உற்சவ விழா எடுத்தல் போன்றவை செய்யப்படுகின்றன. இறைவனுக்கு அபிசேகம் செய்தலும், விரும்பியவற்றை படைப்பதும் இம்மார்க்கத்தினை சேர்ந்தாகும்.

சிவபெருமானை மணம் முடிக்க ஆதிசக்தி பார்வதியாக அவதாரம் எடுத்தார். இறைவனான சிவபெருமானை காதலனாக நினைத்து வாழ்ந்தாலும், அவரால் சிவபெருமானை அடைய இயலவில்லை. எனவே நாரத முனிவர் பார்வதி தேவியிடம் பக்தி மார்க்கத்தினை கடைபிடித்து சிவபெருமானை அடையச் செய்தார் என்று இந்து சமய நூல்கள் தெரிவிக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தி_மார்க்கம்&oldid=1464768" இலிருந்து மீள்விக்கப்பட்டது