பக்தி யாதவ்

பக்தி யாதவ் (Bhakti Yadav)(3 ஏப்ரல் 1926 – 14 ஆகத்து 2017) என்பவர் இந்திய மருத்துவர் ஆவார். இவர் இந்தியாவின் இந்தூரிலிருந்து இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் (MBBS) பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார். மேலும் இவர் இந்தியாவின் உயரிய குடிமகன் விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருதைப் பெற்றதன் மூலம் அங்கீகரிக்கப்பட்டார்.[1][3] 1948 முதல் இலவச சிகிச்சை அளிப்பது உட்பட இவரது பெருந்தன்மைக்காக இவர் அறியப்பட்டார்.[2] இவர் மகப்பேறு மருத்துவராக இருந்தார்.[1]

பக்தி யாதவ்
Bhakti Yadav
பிறப்பு(1926-04-03)3 ஏப்ரல் 1926
மாகித்பூர், உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம், இந்தியா
இறப்பு14 ஆகத்து 2017(2017-08-14) (அகவை 91)
இந்தோர், மத்தியப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்திய மக்கள்
மற்ற பெயர்கள்மருத்துவ சகோதரி
பணிமகளிர் நலவியல்.[1]
அறியப்படுவதுஇலவச மருத்துவம் 1948 முதல்[2]
விருதுகள்பத்மசிறீ [1]

இளமை

தொகு

பக்தி யாதவ் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி மகித்பூரில் உள்ள உஜ்ஜயினில் பிறந்தார். இவர் புகழ்பெற்ற மகாராட்டிர குடும்பத்தைச் சேர்ந்தவர். 1937-ல் பெண் கல்வி ஊக்கமளிக்காதபோது, ​​உயர் படிப்புக்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். இவரது தந்தை இவரை ஏழாம் வகுப்பு வரை படிக்க அருகில் உள்ள கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். இதன்பிறகு யாதவை அவரது தந்தை அகில்யா ஆசிரமப் பள்ளியில் சேர்க்க இந்தூருக்குச் சென்றார், அந்தக் காலத்தில் இந்தூரில் இருந்த ஒரே பெண்கள் பள்ளி. பள்ளியில் தங்கும் வசதி இருந்தது. தனது 11ஆம் வகுப்புக்குப் பிறகு, 1948-ல், தனது இளம் அறிவியல் படிப்பிற்காக இந்தூரில் உள்ள ஹோல்கர் அறிவியல் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் முதலாம் ஆண்டில் முதலிடம் பெற்றார்.[4]

மருத்துவக் கல்வி

தொகு

மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவக் கல்வியினை யாதவ் படித்தார். இங்கு இவர் 11ஆம் வகுப்புக்கான நம்பகமான முடிவுகளின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டார். மொத்தமுள்ள 40 மருத்துவ மாணவர்களில், இவர் மட்டுமே பெண். இந்த மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர்களின் முதல் தொகுதியின் முதல் பெண் மாணவி பக்தி ஆவார். 1952-ல் மருத்துவ பட்டம் பெற்ற பிறகு, மத்திய இந்தியாவின் முதல் மருத்துவராகவும் ஆனார். இவர் மகாத்மாகாந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேல்படிப்பினை படித்தார்.[4]

மருத்துவ பணி

தொகு

ஏழை ஆலைத் தொழிலாளர்களின் மனைவிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக நந்தலால் பண்டாரி மகப்பேறு இல்லத்தில் பணிபுரிவதற்காக யாதவ் அரசாங்கத்தின் வேலை வாய்ப்புகளை நிராகரித்தார். இவர் தனது கணவர் சி. எஸ். யாதவுடன் தனது இல்லத்தில் வாத்சல்யா முதியோர் இல்லத்தைத் தொடங்கினார்.[5] இவருக்குப் பின்னர், இந்த முதியோர் இல்லத்தினை சேத்தன் எம் யாதவ், இவரது மகன் மற்றும் இவரது மருமகள் சுனிதா யாதவ் ஆகியோர் கவனித்து வருகின்றனர். யாதவ் 70,000 சாதாரண பிரசவங்கள் உட்பட 1.5 லட்சம் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.[6] இவர் சுமார் ஆயிரம் பெண் நோயாளிகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல் சிகிச்சை அளித்துள்ளார்.[7]

இறப்பு

தொகு

யாதவ் 14 ஆகத்து 2017 அன்று தனது வீட்டில் இறந்தார். இவர் எலும்புப்புரை மற்றும் பிற வயது தொடர்பான நோய்களால் அவதிப்பட்டார். கடந்த சில மாதங்களாக இவர் தொடர்ந்து உடல் எடையைக் குறைத்து வந்தார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Mekaad, Salil (20 April 2017). "91-year-old woman doctor handed over Padma Shri in Indore - Times of India". The Times of India. TNN. http://timesofindia.indiatimes.com/city/indore/91-year-old-woman-doctor-handed-over-padma-shri-in-indore/articleshow/58285105.cms. 
  2. 2.0 2.1 Tiwari, Shewali (26 January 2017). "Indore's 1st Woman Doctor Who's Been Treating Patients For Free Since 1948 Awarded Padma Shri" (in en). indiatimes.com. http://www.indiatimes.com/news/india/indore-s-1st-woman-doctor-who-s-been-treating-patients-for-free-since-1948-to-get-padma-shri-270289.html. 
  3. सिंह, रवीश पाल (25 January 2017). "इंदौर की पहली महिला MBBS 'डॉक्टर दादी' को मिला पद्मश्री". Aaj Tak. http://aajtak.intoday.in/story/nonogenarian-bhakti-yadav-popularly-known-as-doctor-dadi-from-indore-to-get-padam-shri-1-908767.html. 
  4. 4.0 4.1 Natu, Parag (25 January 2017). "फ्री इलाज करती हैं इंदौर की पहली महिला MBBS, 91 की उम्र में मिला पद्मश्री [First MBBS From Indore Doctor Bhakti Yadav Awarded Padamshri For Her Services"] (in hi). Dainik Bhaskar (Indore). http://www.bhaskar.com/news/c-8-first-mbbs-from-indore-doctor-bhakti-yadav-awarded-padamshri-for-her-services-indore-news-id0504.html. 
  5. "Dr Bhakti Yadav (padmashri 2017)". drbhaktiyadavpadmashri2017.business.site (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
  6. "Dr Bhakti Yadav (padmashri 2017)". drbhaktiyadavpadmashri2017.business.site (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
  7. Zee News, Indore: 91 Year old Dr. Bhakti Yadav Inspiring Story, பார்க்கப்பட்ட நாள் 2019-01-19
  8. "Padma Shri Dr Bhakti Yadav passes away in Indore - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/indore/padma-shri-dr-bhakti-yadav-passes-away-in-indore/articleshow/60055710.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தி_யாதவ்&oldid=3747434" இலிருந்து மீள்விக்கப்பட்டது