பங்கபுரம் மயில்கள் சரணாலயம்
பங்கபுரம் மயில் சரணாலயம் (Bankapura Peacock Sanctuary) கருநாடகாவிலுள்ள இரண்டு மயில் சரணாலயங்களில் ஒன்றாகும். ஒன்று ஆவேரி மாவட்டத்தில் பங்கபுரம் கோட்டையின் உள்ளேயும், மற்றொன்று மண்டியா மாவட்டத்தில் ஆதிச்சுஞ்சனகிரியில் அமைந்துள்ளது. [1]
இப்பகுதியில் கிலாரி மாடுகளுக்கு பிரத்யேகமாக வளர்க்கப்படும் தீவனச் சாகுபடியால் இது சிறந்த மயில் வாழ்விடமாக மாறியுள்ளது. கோட்டையிலுள்ள அகழி சுமார் 36 கி.மீ நீளமும், 10–15 மீட்டர் அகலமும், 7–8 மீட்டர் ஆழமும் கொண்டது.
அகழியின் கரைகள் அகாசியா, வேம்பு மற்றும் அத்தி போன்ற தாவரங்களால் மூடப்பட்டுள்ளன. கால்நடைகளுக்காக வளர்க்கப்படும் மக்காச்சோளம் , சோளம் போன்றத் தானியங்கள் மயில்களுக்கு சிறந்த உணவாக இருக்கிறது. இரண்பென்னூர் வட்டத்தைச் சுற்றி அதிக அளவில் மயில்கள் காணப்படுகின்றன
சரணாலயம்
தொகுபங்கபுரத்திலுள்ள "நவிலு பக்சிதாமா" [2] மயில்களின் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றில் பிரத்தியேகமாக ஈடுபட்டுள்ள நாட்டின் இரண்டாவது சரணாலயம் ஆகும்.
இப்பகுதியில் மயில்களின் பெரும் இருப்பைப் புரிந்துகொண்ட இந்திய அரசு, சூன் 9, 2006 அன்று பங்கபுரத்தை மயில்கள் சரணாலயமாக அறிவித்தது. இந்த சரணாலயம் 139 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க கோட்டையின் எச்சங்களைக் கொண்டுள்ளது. நிலத்தின் உயரமான மேடு மற்றும் ஆழமான அகழிகள் இந்த பறவைகளுக்கு சரியான இருப்பிடத்தை வழங்கியுள்ளன. இந்த சரணாலயம் முதல் உலகப் போருக்குப் பின்னர் 1919இல் அமைக்கப்பட்ட கால்நடை வளர்ப்பு பண்ணையில் அமைந்துள்ளது. இந்த பண்ணை சரணாலயத்தின் மொத்த 139 ஏக்கரில் (0.56 கிமீ 2) 90 ஏக்கரில் (360,000 மீ 2) அமைந்துள்ளது.
தோராயமான மதிப்பீட்டின்படி, சரணாலயத்தில் 1,000 க்கும் மேற்பட்ட மயில்கள் உள்ளன. மேலும், மனித தலையீடு குறைவாக இருப்பதால் இந்த பறவைகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கிறது.
பிற பறவைகள்
தொகுபங்கபுரம் கோட்டை மயில்களுக்கு மட்டுமல்லாமல், கொம்பு ஆந்தை, தவிட்டிச் சிலம்பன், மேக்பை, ராபின், பச்சைப் பஞ்சுருட்டான், பக்கி, மைனா, கருஞ்சிட்டு, மணிப்புறா, கிளிகள், மீன் கொத்தி, இந்திய சாம்பல் இருவாச்சி, நீலவால் பஞ்சுருட்டான், தையல்சிட்டு போன்ற பல பறவைகளுக்கும் வீடாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bankapur's peacocks call for help". பார்க்கப்பட்ட நாள் 2013-05-04.
- ↑ "Peacock Paradise". Archived from the original on 2012-04-06. பார்க்கப்பட்ட நாள் 2008-08-12.