பங்கி தீவுகள்
பங்கித் தீவு (Pulau Banggi) மலேசிய நாட்டில், இரண்டாவது பெரிய மாநிலமான சபா மாநிலத்தில் , கூடாட் மாவட்டத்தில் அமையப் பெற்ற ஒரு தீவாகும். மலேசிய நாட்டில் இருக்கும் தீவுகளிலேயே மிகப்பெரிய தீவு, பங்கித் தீவும் ஒன்றாகும்.
பங்கித் தீவு | |
---|---|
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
மக்கள்தொகை (2003) | |
• மொத்தம் | 20,000 |
பங்கி தீவு[1] சபா மாநிலத்தின் வடக்கு கடற்கரையொட்டி அமைந்துள்ளது. சுமார் 440 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த தீவில் சுமார் 20,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பங்கி தீவின் மிகப் பெரிய நகரம் லிம்புவாக். இத்தீவில் அடர்ந்த காட்டுப் பகுதிகள் காணப் படுகின்றன. அழகிய கடற்கரையைக் கொண்டபோதிலும், இன்னமும் சுற்றுலாத் தலமாக முழுவதும் அங்கீகரிக்கப்படாத ஒரு தீவாகவே விளங்கி வருகின்றது.
அருகில் இருக்கும் தீவுகளைச் சுற்றிப் பார்ப்பதற்கு சிறிய படகுகள் வாடகைக்கு கிடைக்கின்றன. படகுகளில் தங்குவதற்கு ஏதுவாக சிறிய சமையலறையைக் கொண்டுள்ளது. பங்கித் தீவு பழங்குடி மக்கள் மர வீடுகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- UN Systemwide Earthwatch பரணிடப்பட்டது 2007-03-17 at the வந்தவழி இயந்திரம்.