பசந்த் குமார் பிசுவால்

இந்திய அரசியல்வாதி

பசந்த் குமார் பிசுவால் (Basant Kumar Biswal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1936 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ஒடிசாவின் துணை முதலமைச்சராகப் பதவியில் இருந்துள்ளார். திர்டோல் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், ஒடிசா பிரதேச காங்கிரசு கட்சியின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.[1][2][3]

பசந்த் குமார் பிசுவால்
Basant Kumar Biswal
3ஆவது ஒடிசா துணை முதலமைச்சர்
பதவியில்
15 மார்ச்சு 1995 – 17 பிப்ரவரி 1999
ஒடிசாவின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1990–2000
முன்னையவர்நித்யானந்த சம்ந்தராய்
பின்னவர்தேபாசிசு சமந்தராய்
தொகுதிதிர்டோல் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பசந்த் குமார் பிசுவால்

(1936-08-23)23 ஆகத்து 1936
துலேங்கு கிராமம், இயகத்துசிம்மபூர்
இறப்பு7 செப்டம்பர் 2003(2003-09-07) (அகவை 67)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மீரா பிசுவால்
பிள்ளைகள்இரஞ்சிப் பிசுவால்
சிரஞ்சிப் பிசுவால்
வாழிடம்(s)துலேங்கு கிராமம், இயகத்துசிம்மபூர் மாவட்டம்
வேலைஉழவர்

இவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முதல் மகன் முன்னாள் துடுப்பாட்ட வீரர் இரஞ்சிப் பிசுவால் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேலாளராகவும் இந்தியன் பிரீமியர் லீக்கின் தலைவராகவும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ஒரு பகுதியாக ஒடிசாவின் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். இரண்டாவது மகன் சிரஞ்சிப் பிசுவால் இயகத்சிங்பூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினராகவும் ஒடிசா சட்டமன்றத்தின் துணை எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார்.[4][5]

இறப்பு

தொகு

பசந்த் குமார் பிசுவால் 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியன்று காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Biswal be friends with J.B. Patnaik again, attends his daughter's wedding". இந்தியா டுடே. 11 January 2014. http://indiatoday.intoday.in/story/basant-kumar-biswal-be-friends-with-j-b-patnaik-again/1/354574.html. பார்த்த நாள்: 30 April 2016. 
  2. Nanda, Kanhun (8 September 2010). "Former deputy CM Basanta Biswal remembered in 7 death anniversary". Orissa Diary இம் மூலத்தில் இருந்து 31 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160531071851/http://orissadiary.com/Jagatsinghpur/ShowDistrictNews.asp?id=21098. பார்த்த நாள்: 30 April 2016. 
  3. Odisha Opposition leaders join Biju Patnaik birth centenary celebration at Paradip
  4. "Former Odisha Deputy CM Basant Biswal’s wife passes away". Odisha Sun Times. 21 December 2015 இம் மூலத்தில் இருந்து 27 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160427104049/http://odishasuntimes.com/2015/12/21/former-odisha-deputy-cm-basant-biswals-wife-passes-away/. பார்த்த நாள்: 30 April 2016. 
  5. "Chiranjib Biswal appointed as deputy leader of Odisha Congress Legislature Party". Pragativaldi. 7 July 2014 இம் மூலத்தில் இருந்து 6 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160306182200/http://pragativadi.com/pic-of-the-day/chiranjib-biswal-appointed-as-deputy-leader-of-odisha-congress-legislature-party#.VA3_6fldXAk. பார்த்த நாள்: 30 April 2016. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசந்த்_குமார்_பிசுவால்&oldid=3920498" இலிருந்து மீள்விக்கப்பட்டது