எரிமலை வளையம்
(பசிபிக் எரிமலை வளையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எரிமலை வளையம் அல்லது பசிபிக் எரிமலை வளையம் (Pacific Ring of Fire) என்பது பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை கொந்தளிப்பு ஏற்படும் பகுதியாகும். குதிரை லாட வடிவ அமைப்பிலுள்ள இதன் நீளம் 40,000 கிமீ ஆகும். இந்த எரிமலை வளையத்தில் 472 எரிமலைகள் உள்ளன. உலகிலுள்ள உயிர்த்துடிப்புள்ள எரிமலைகளில் 50 விழுக்காடு இங்கு உள்ளன. உலகின் 90% நிலநடுக்கங்களும் 81% பெரிய நிலநடுக்கங்களும் இப்பகுதியிலேயே ஏற்படுகின்றன. 5-6% நிலநடுக்கங்களும் 17% பெரிய நிலநடுக்கங்களும் அல்பைட் பெல்ட் பகுதியில் ஏற்படுகின்றன.
பசிபிக் கடல் தட்டானது அதைச்சுற்றியுள்ள மற்ற நில மற்றும் கடல் தட்டுகளுடன் உராய்வதாலும் மோதுவதாலும் பசிபிக் எரிமலை வளையம் ஏற்படுகிறது.