பசுந்தாள் உரப்பயிர்கள்

மண்ணில் கனிமச் சத்தினைச் சேர்ப்பதற்காக, தமிழக உழவர்கள் பயறுவகைப்பயிர் குடும்பத்தைச்சார்ந்த பயிர்களை வயலில் விதைத்து, அவை நன்கு வளர்ந்தவுடன், பூப்பதற்கு முன், வயலில் நன்கு மடக்கி உழப்படும் பயிர்களே பசுந்தாள் உரப்பயிர்கள் எனப்படும்.

சங்குப்பூ

பசுந்தாள் உரப்பயிரின் நன்மைகள் தொகு

 
காவாளை

பசுந்தாள் உரப்பயிரின் வேரிலுள்ள வேர்முடிச்சுகள் வளிமண்டலத்திலுள்ள கிட்டா நிலையிலுள்ள நைட்ரஜனை, கிட்டும் நிலையிலான நைட்ரஜனாக மாற்றி இயற்கை வேளாண்மைக்கு உறுதுணை செய்கின்றது.

தமிழகப் பசுந்தாள் உரப்பயிர்கள் தொகு

தமிழகத்தில் இயற்கை வேளாண்மை செய்பவர்கள் சங்குப்பூ, சணப்பை, அகத்தி, சூபாபுல் ஆகிய பசுந்தாள் உரப்பயிர்களை மண்ணிற்கு வளம் சேர்க்க பயன்படுத்துகின்றனர். உளுந்து, பாசிப்பயறு, காராமணி, துவரை ஆகியவற்றையும் விதைத்து மண்ணில் கனிமச்சத்தினைச்சேர்க்கும் உத்தியை தமிழக உழவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுந்தாள்_உரப்பயிர்கள்&oldid=3418682" இலிருந்து மீள்விக்கப்பட்டது