பசுபதி நாத் சிங்
பசுபதிநாத் சிங், ஜார்க்கண்டைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 1949ஆம் ஆண்டின் ஜூலை பதினோராம் நாளில் பிறந்தார். இவர் பட்னா மாவட்டத்தில் உள்ள லக்கன்பூரில் பிறந்தார். இவர் 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, தன்பாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]
பதவிகள்தொகு
இவர் கீழ்க்காணும் பதவிகளில் இருந்துள்ளார்.[1]
- 1995-2000: பீகார் சட்டமன்ற உறுப்பினர்
- 2000-2005: ஜார்க்கண்டின் சட்டமன்ற உறுப்பினர்
- 2000-2005: ஜார்க்கண்டு அரசின் அமைச்சர்
- 2005-2009: ஜார்க்கண்டு சட்டமன்ற உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
சான்றுகள்தொகு
- ↑ 1.0 1.1 "உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை". 2012-01-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-02 அன்று பார்க்கப்பட்டது.