பசுபதி போசு
பசுபதி போசு (Pasupati Bose) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். 1907 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். ஓர் உடற்கூறியல் பேராசிரியராக இவர் பணிபுரிந்தார்.
தகவல்
தொகுபோசு 1923 ஆம் ஆன்டு முர்சிதாபாத் சில்லா பள்ளியில் தனது பள்ளிக் கல்வியைப் படித்து முதலிடம் பெற்றார். பள்ளியிலும் கல்லூரியிலும் எப்போதும் இவர் இரண்டாவதாக இருந்ததில்லை. மருத்துவம் படிக்க போசு கொல்கத்தா சென்றார். 1932 ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் மருத்துவ முனைவர் பட்டமும் பெற்றார். படிப்பில் முதல் தரம் பெற்றதோடு மட்டுமல்லாமல், 1000-மதிப்பெண்களுக்கு 968 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரையிலுங்கூட இம்மதிப்பெண் ஒரு சாதனையாக இருந்தது. மாணவராக இருந்தபோது இவருக்கு பல தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. போசு கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் உடற்கூறியல் பேராசிரியராகச் சேர்ந்தார். 1938 ஆம் ஆண்டில் திருமணம் செய்து ஒரு மகன் மற்றும் ஒரு மகளுக்கு தந்தையானார்.
1952 ஆம் ஆண்டு இராக்பெல்லர் அறக்கட்டளையின் அழைப்பின் பேரில் போசு அமெரிக்கா சென்றார். அங்கு இவர் பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை வழங்கினார். அதைத் தொடர்ந்து, இங்கிலாந்து இராயல் கழகத்தின் உறுப்பினர் தகுதி என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.
கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இவர் பணியாற்றிய கடைசி ஐந்து ஆண்டுகளில், நெருங்கிய தோழரும் அக்கால மேற்கு வங்க முதல்வருமான டாக்டர் பிதான் சந்திர ராயின் வேண்டுகோளின்படி போசு அக்கல்லூரியின் துணை முதல்வராக ஆனார்.
போசு 1979 ஆம் ஆண்டு தனது 72 ஆம் வயதில் இறந்தார். கொல்கத்தா மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் பேராசிரியராக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். [1] பசுபதி போசு லேன் என்ற கொல்கத்தாவில் உள்ள ஒரு தெரு இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Personalities" Kolkata Medical College பரணிடப்பட்டது 2007-07-01 at the வந்தவழி இயந்திரம்