பச்சை ஓந்தி

ஊர்வன இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Calotes|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

பச்சை ஓந்தி (Calotes calotes) என்பது இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படும் ஓந்தி பல்லி ஆகும். இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள், சேர்வராயன் மலைகளின் காடுகளில் காணப்படுகின்றது.

பச்சை ஓந்தி
இணை சேரும் காலத்தில் ஆண் ஓந்தியின் நிறம்
இணை சேரா காலத்தில் ஆண் ஒந்தியின் நிறம்
இரண்டுமே இலங்கையின் விஹாரஹேன சிங்கராஜ வனத்தில்.
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Calotes
இனம்:
இருசொற் பெயரீடு
Calotes calotes
(லின்னேயஸ், 1758[1]
வேறு பெயர்கள்
  • Lacerta Calotes Linnaeus, 1758
  • Iguana calotes Laurenti, 1768
  • Agama calotes Daudin, 1802
  • Calotes ophiomachus Duméril & Bibron, 1837

விளக்கம்

தொகு

பச்சை ஓந்தியானது வால் உட்பட 50 முதல் 65 செமீ (19.5 முதல் 25.5 அங்குலம்) நீளம் கொண்டது. [2]

தலையின் நீளம் அதன் அகலத்தை விட ஒன்றரை மடங்கு பெரியது. இந்த ஓந்தி குழிவான நெற்றி, வீங்கிய கன்னங்கள் மற்றும் மென்மையான, சமமற்ற மேல் தலை-செதில்களைக் கொண்டுள்ளது. உடல் சற்று தட்டையாக இருக்கும். முதுகு செதில்கள் முட்கள் போல பெரியவையாக இருக்கும். அவை பொதுவாக பலவீனமான இணைப்பை கொண்டவை. இந்த செதில்கள் பின்னோக்கியும் மேல்நோக்கியும் நீட்டியபடி இருக்கும். தொண்டைப் பை உருவாக்கப்படவில்லை.

இந்த ஓந்தி பிரகாசமான பச்சை நிறத்தில் உள்ளது. உடலில் பொதுவாக 5 அல்லது 6 வெள்ளை அல்லது அடர் பச்சை நிற குறுக்குக் கோடுகள் இருக்கும்; எனினும் இவை மாறக்கூடியவை. பெரும்பாலும் கோடுகள் வால் வரை தொடர்கின்றன. இவற்றின் தலை மஞ்சள் அல்லது பழுப்பு-பச்சை நிறத்தில் இருக்கும். ஆண் ஓந்திகளின் தலை, தொண்டை போன்றவை இணை சேரும் காலத்தில் மட்டும் பிரகாசமான செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறமாக மாறுகின்றன. இந்த ஓந்திகளின் அடிப்பகுதி வெளிர் பச்சை, வால் வெளிர் பழுப்பு நிறமானவை. இளம் மற்றும் முதிர்ச்சியடையாத ஓந்திகளுக்கு சில நேரங்களில் வெண்மையான முதுகுப் பக்கவாட்டு பட்டை இருக்கலாம். [3] இது வேம்பு போன்ற பசுமையான இலைகளைக் கொண்டிருக்கும் மரங்களில் வலம் வரும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Mohomed M. Bahir & Kalana P. Maduwage (2005). "Calotes desilvai, a new species of agamid lizard from Morningside Forest, Sri Lanka" (PDF). Raffles Bulletin of Zoology Suppl. 12: 381–392. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s12/s12rbz381-392.pdf. பார்த்த நாள்: 2023-06-18. 
  2. The Reptile database
  3. Chandrasekara, Chamith (11 February 2012). "Green Forest Lizard (Calotes calotes)". பார்க்கப்பட்ட நாள் 3 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_ஓந்தி&oldid=4109845" இலிருந்து மீள்விக்கப்பட்டது