பச்சை விளக்கு (2020 திரைப்படம்)

2020 திரைப்படம்

பச்சை விளக்கு (Pachai Vilakku) என்பது 2020ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். மாறன் இயக்கி இப்படத்தில் மாறன், தீஷா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இமான் அண்ணாச்சி, தாரா ஆகியோர் பிற வேடங்களில் நடித்துள்ளனர்.[1] கன்னட நடிகையான ரூபிகா இப்படத்தின் வழியாக தமிழில் அறிமுகமாகினார்.[2]

பச்சை விளக்கு
இயக்கம்டாக்டர் மாறன்
தயாரிப்புமரு சி. மணிமேகலை பி.எஸ்சி,எம்பிபிஎஸ்
கதைடாக்டர் மாறன்
இசைதேவேந்திரன் (இசையமைப்பாளர்)
நடிப்பு
  • மாறன்
  • தீஷா
  • மகேஷ்
  • தாரா
  • சிவசங்கர் மாஸ்டர்
  • இமான் அண்ணாச்சி
  • மனோபாலா
  • போஸ்டர் நந்து
  • நெல்லை சிவா
  • ரூபிகா
ஒளிப்பதிவுஎஸ். வி. பாலாஜி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்டிஜிதிங் மீடியா ஒர்க்ஸ்
விநியோகம்டிஜிதிங் மீடியா ஒர்க்ஸ்
வெளியீடு3 சனவரி 2020 (2020-01-03)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு
  • மாறன் அஸ்வின் குமாராக
  • தீஷா சுபாசினியாக
  • இமான் அண்ணாச்சி, காவல் ஆய்வாளர் விஜயாக
  • தாரா வைஷ்ணவியாக
  • ரூபிகா பேயாக
  • ஸ்ரீ மகேஷ் ராஜசேகர் அல்லது ராபர்ட்டாக
  • மனோபாலா பேராசிரியராக
  • போஸ்டர் நந்தகுமார் பெரியவராக
  • கே. சிவசங்கர் பேராசிரியராக
  • நெல்லை சிவா காவல் ஆய்வாளராக

தயாரிப்பு

தொகு

இப்படமானது சென்னை, தேசிய நெடுஞ்சாலை 45, திருப்போரூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.[3]

இப்படத்திற்கு தேவேந்திரன் நான்கு பாடல்களுக்கு இசை அமைத்தார்.[3]

வெளியீடு

தொகு

டெக்கான் குரோனிக்கிள் எழுதிய விமர்சனத்தில், "ஒரு இயக்குனராக, அவர் [மாறன்] தீஷா, தாரா மற்றும் பிற புதுமுகங்களிடமிருந்து நல்ல வேலை வாங்கி இருக்கிறார். இமான் அண்ணாச்சி சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் ஒரு நடிகராக, மாறன் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். திரைக்கதை சில நேரங்களில் கொஞ்சம் பிரசங்கம் செய்கிறது; ஆயினும்கூட, ஒரு நல்ல செய்தியை தெரிவிப்பதற்கான நோக்கம் தெரிகிறது ".[4]

குறிப்புகள்

தொகு
  1. Subramanian, Anupama (27 December 2019). "Stories like Pachai Vilakku need to be told: Bharathiraja". Deccan Chronicle.
  2. Subramanian, Anupama (20 July 2019). "Pachai Vilakku hails traffic policemen". Deccan Chronicle.
  3. 3.0 3.1 CR, Sharanya (5 November 2019). "'Pachai Vilakku' deals with road safety". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/pachai-vilakku-deals-with-road-safety/articleshow/71893660.cms. பார்த்த நாள்: 19 March 2020. 
  4. Subramanian, Anupama (4 January 2020). "Pachai Vilakku review: Romancing the traffic". Deccan Chronicle.

வெளி இணைப்புகள்

தொகு