பஜாஜ் பின்சர்வ்

பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) இந்தியாவைச் சேர்ந்த வங்கி அல்லாத நிதிச் சேவை நிறுவனமாகும். இதன் தலைமையிடம் மஹாராட்டிரா மாநிலத்தின் புனே நகரில் உள்ளது. இந்நிறுவனமானது கடன், சொத்து மேலாண்மை, செல்வ மேலாண்மை மற்றும் காப்பீடு சேவைகளை வழங்குகிறது.  நிதி சேவைகள் மட்டுமல்லாது காற்றாலை மூலமான மின்சார உற்பத்தியிலும் இந்த நிறுவனம் கால்பதித்துள்ளது. பஜாஜ் அல்லியன்ஸ் ஆயுள் காப்பீடு நிறுவனம் மற்றும் பஜாஜ் அல்லியன்ஸ் பொது காப்பீடு நிறுவனம் ஆகியன இந்த நிறுவனத்தின் துணை நிறுவனங்களாகும். இந்த நிறுவனம் 2007 ஆம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து பிரிந்து புது நிறுவனமாக உதயமானது [1]

பஜாஜ் பின்சர்வ் லிமிடெட்
வகைபொது
தேபசBAJAJFINSV முபச532978
நிறுவுகைமே 2007 (17 ஆண்டுகளுக்கு முன்னர்) (2007-05)
நிறுவனர்(கள்)ஜம்னாலால் பஜாஜ்
தொழில்துறைநிதிச் சேவைகள்
இணையத்தளம்www.bajajfinserv.in

மேற்கோள்கள்

தொகு
  1. "About Us - Learn more about Bajaj Finserv". www.bajajfinserv.in. பார்க்கப்பட்ட நாள் 2022-07-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஜாஜ்_பின்சர்வ்&oldid=3454465" இலிருந்து மீள்விக்கப்பட்டது