பஜ்ரங் தள்
(பஜ்ரங் தளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பஜ்ரங் தள் என்பது விசுவ இந்து பரிசத் இயக்கத்தின் இளைஞர் பிரிவாகும்.[1][2] இந்த இயக்கம் இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.[2][3] இது 1984ஆம் ஆண்டின் அக்டோபர் முதலாம் நாளில் நிறுவப்பட்டது. இந்த இயக்கம் இந்தியா முழுவதும் பரவியிருந்தாலும், வடக்கு இந்தியாவிலும், மத்திய இந்தியாவிலும் பலமானதாக இருக்கிறது. இந்துக் கடவுளான அனுமனைக் குறிக்கும் சொல்லே பஜ்ரங்.
உருவாக்கம் | 1 அக்டோபர் 1984 |
---|---|
வகை | விசுவ இந்து பரிசத் இயக்கத்தின் பிரிவு |
சட்ட நிலை | இயக்கத்தில் |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
தலைவர் | ராஜேஷ் பாண்டே |
தாய் அமைப்பு | விசுவ இந்து பரிசத் |
வலைத்தளம் | பஜ்ரங் தள் |
இவர்களின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்று, அயோத்தியில் ராம ஜென்மபூமி கோயிலைக் கட்டுவதாகும். இந்தியாவில் இந்து சமயத்தை காப்பற்றுவதும், மதமாற்றங்களைத் தடுப்பதும் தன் கொள்கைகள் எனக் குறிப்பிடுகிறது.
சர்ச்சை
தொகு- இந்த இயக்கம் 2002ஆம் ஆண்டில் குஜராத் வன்முறையின்போது முஸ்லீம்களுக்கு எதிராக செயல்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.[4]
தடைக் கோரிக்கை
தொகுஇந்த இயக்கத்தை தடை செய்யக் கோரி சில இயக்கங்களும் அமைப்புகளும் தனி நபர்களும் கோரிக்கை விடுத்தன. இதுவரையிலும் இந்த இயக்கம் தடை செய்யப்படவில்லை.
- 2008ஆம் ஆண்டின் அக்டோபர் ஐந்தாம் நாளில் இந்தியாவின் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் இந்த இயக்கத்தை தடை செய்யப் பரிந்துரைத்தது. அதற்கு காரணமாக, கர்நாடகாவில் உள்ள கிறிஸ்தவ நிறுவனங்களை பஜ்ரங் தள் இயக்கத்தினர் தாக்கியதை குறிப்பிட்டது.[5]
சான்றுகள்
தொகு- ↑ Chetan Bhatt (2001). Hindu Nationalism: Origins, Ideologies and Modern Myths. Berg Publishers. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85973-348-6.
- ↑ 2.0 2.1 Anand, Dibyesh (2007). "Anxious sexualities: Masculinity, nationalism and violence". The British Journal of Politics & International Relations 9 (2): 257–269. doi:10.1111/j.1467-856x.2007.00282.x.
- ↑ Deshpande, Rajeev (30 September 2008). "Bajrang Dal: The militant face of the saffron family?". The Times of India இம் மூலத்தில் இருந்து 2012-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121021220153/http://articles.timesofindia.indiatimes.com/2008-09-30/india/27934677_1_bajrang-dal-prayer-halls-orissa-and-karnataka. பார்த்த நாள்: 2008-09-30.
- ↑ State Participation and Complicity in Communal Violence in Gujarat Humean Rights Watch – June 2002
- ↑ [http://www.ibnlive.com/news/ban-bajrang-dal-says-national-minorities-panel/75102-3.html Ban Bajrang Dal, says national minorities p anel] CNN-IBN, 6 October 2008
இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையத்தளம் பரணிடப்பட்டது 2015-02-06 at the வந்தவழி இயந்திரம்