பஞ்சபாண்டவர் தலங்கள்
பஞ்ச பாண்டவர்கள் எனப்படும் தருமர், பீமன், அர்ச்சுனன், நகுலன் சகாதேவன் ஆகிய ஐந்து பேர்களால் தனித்தனியாக பிரதிஷ்டை செய்யப் பட்ட (மூலவர் சிலைகளை உருவாக்கிய) ஐந்து கோயில்கள் கேரளாவில் உள்ளது. இவைகளைப் பஞ்ச பாண்டவர் தலங்கள் என்கின்றனர்.
திருவண்வண்டூர் கோயில்
தொகுகேரளாவில் செங்கண்ணூர் மற்றும் திருவல்லாவுக்குமிடையில் எரிமேலிக்கரை வழியில் இரண்டாவது கிலோ மீட்டரில் திருவண்வண்டூர் உள்ளது. இங்குள்ள கோயில் மூலவர் பஞ்ச பாண்டவர்களில் நகுலனால் உருவாக்கப்பட்டது. இங்கு வட்ட வடிவமான கருவறை மண்டபத்தில் சங்கு சக்கர, கதா பத்ம பாணியாக மூலவர் சிலை உள்ளது.
திருச்சிற்றாறு கோயில்
தொகுதிருவண்வண்டூரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருச்சிற்றாறு எனுமிடத்தில் மகாவிஷ்ணு கோயில் ஒன்று உள்ளது. இக் கோயில் மூலவர் பஞ்ச பாண்டவர்களில் தருமரால் உருவாக்கப்பட்டது.
ஆரண்முள கோயில்
தொகுதிருச்சிற்றாறுவில் இருந்து கிழக்குப் பகுதியில் பத்து கிலோமீட்டர் தொலைவில் ஆரண்முள எனும் ஊர் உள்ளது. இங்கு ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் உள்ளது. இக் கோயில் மூலவர் பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுணனால் உருவாக்கப்பட்டது.
திருப்புலியூர் கோயில்
தொகுசெங்கண்ணூருக்கும் மாவேலிக்கரைக்கும் இடையில் திருப்புலியூர் உள்ளது. இங்கு மகாவிஷ்ணு கோயில் உள்ளது. இக் கோயில் மூலவர் பஞ்ச பாண்டவர்களில் பீமனால் உருவாக்கப்பட்டது.
திருக்கொடித்தானம் கோயில்
தொகுதிருவல்லாவிலிருந்து கோட்டயம் செல்லும் பாதையில் சங்கனாச்சேரியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கொடித்தானம். இங்குள்ள பெருமாள் கோயில் மூலவர் பஞ்ச பாண்டவர்களில் சகாதேவனால் உருவாக்கப்பட்டது. இக்கோயில் அற்புத நாராயணர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
ஆதாரம்
தொகு- பரணீதரன் எழுதிய கேரள ஆலயங்கள் பாகம்- 1 (பக்கம் 83 முதல் 85 வரை)