பஞ்சபுராணம் ஓதுதல்

தாமிரபரணி மஹாத்மியம் படி தென்பாண்டிநாட்டான் என்று பாண்டி நாட்டவரால் அழைக்கப்படும் ஈசனின் ப

பஞ்சபுராணம் ஓதுவது என்பது சிவபெருமானின் புகழினைப் பாடும் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர்களின் தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலிருந்து ஒரு பாடலும், திருவாசகத்திலிருந்து ஒரு பாடலும், திருவிசைப்பாவிலிருந்து ஒரு பாடலும், திருப்பல்லாண்டிலிருந்து ஒரு பாடலும், பெரியபுராணத்திலிருந்து ஒரு பாடலும் என ஐந்து பாடல்களை தேர்ந்தெடுத்துப் பாடுவது ஆகும். இதனை தோத்திரம் ஓதுதல் என்றும் குறிப்பிடுகின்றர். [1]

தோற்றக் காரணம்

தொகு

பஞ்ச புராணம் ஓதுதல் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அபிசேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கும் போது பன்னிருதிருமுறைகள் பாடப்படுவது வழக்கமாகும். அவ்வாறு பன்னிருத்திருமுறைகளைப் பாட இயலாத நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஐந்து நூல்களிலிருந்து ஐந்து பாடல்களை பாடும் முறை உருவாக்கப் பெற்றது. [2]

ஓதப்படும் முறை

தொகு

தேவாரம், திருவாசகம், திருசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஆகிய ஐந்து நூல்களும் பஞ்ச புராணம் என்று அழைக்கப்பெறுகிறது. திருச்சிற்றம்பலம் என்ற சிதம்பரத்தினைக் குறிக்கும் சொல்லினை பஞ்சபுராணம் பாடத் துவங்கும் பொழுதும், முடிக்கும் பொழுதும் கூற வேண்டியது மரபாகும். [3]

இந்த ஐந்துப் பாடல்களுடன் சிவபெருமானின் மகனான முருகனது புகழினைப் பாடும் திருப்புகழையும் இணைத்து பாடும் வழக்கம் பிற்பாடு ஏற்பட்டது. அத்துடன் கந்தபுராண வாழ்த்துப் பாடலும் கூட இணைத்துப் பாடப்படுகிறது.

கருவி நூல்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. இறைவனை அடையும் வழிகள் – நோன்ப ஆ.நோன்பு மலேசிய சைவ நற்பணிக் கழகம்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. அஞ்சைப்பாடினா பஞ்சா பறந்திடும்!-தினமலர் ஜூலை 01,2011
  3. திருமுறை ஓதப்படும் முறைகள்

இவற்றையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சபுராணம்_ஓதுதல்&oldid=3219335" இலிருந்து மீள்விக்கப்பட்டது