பஞ்ச புராணம்
சைவ நூல்களான பன்னிரு திருமுறைகளிலும் ஐந்து பகுதிகளை மட்டுமே கொண்ட பாகுபாடு பஞ்ச புராணமாகும். இவை பன்னிரு திருமுறைகளை அன்றாடம் ஓத இயலாத காரணத்தினால் எளிமைப்படுத்த உருவாக்கப்பட்டது.
பஞ்ச புராணத்தின் பகுதிகள்
தொகு- தேவாரம் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார்
- திருவாசகம், திருக்கோவையாரர் - மாணிக்கவாசகர்
- திருவிசைப்பா - திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது சைவ அடியார்கள்
- திருப்பல்லாண்டு - சேந்தனார்
- திருத்தொண்டர்புராணம் - சேக்கிழார்
பஞ்சபுராணம் ஓதுதல்
தொகுசிவாலயங்களில் ஆறுகால பூசைகளின் போது பஞ்சபுராணம் ஒதுதல் நிகழ்கிறது. இதற்காக தேவாரம், திருவாசகம் திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர்புராணம் ஆகிய ஐந்து பகுதிகளிலிருந்தும் ஒரு பாடல் வீதம் பாடப்படுகிறது.
பஞ்சபுராணம் பாட துவங்கும் போது 'திருச்சிற்றம்பலம்' என்று சொல்லி துவங்கி, விநாயகா் வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பிக்க வேண்டும். பின்னா் மேற்கூறிய 5 பகுதிகளிலிருந்து ஒருபாடல் வீதம் பாடி, தொடா்ந்து அருணகிாி நாதா் பாடிய திருப்புகழ் தொகுப்பில் இருந்து "ஏறுமயிலேறி விளையாடுமுகம் ஒன்றே" என்ற பாடலுடன் "வான்முகிழ் வழாது பெய்க" என்ற கந்த புராண வாழ்த்துப்பாடல் பாடி நிறைவு செய்வது வழக்கம்.
கருவி நூல்
தொகுசிவவழிபாடு - கி பழநியப்பனார் நூல்