சைவத் திருமுறைகள்

தமிழ் இந்து சைவ இலக்கியம்
(பன்னிரு திருமுறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்குப் பட்டியலிடப்பட்டுள்ளன.

திருமுறைத் தொகுப்பு

தொகு

பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.

திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்படுகிறது.

பன்னிரு திருமுறைகளின் பட்டியல்

தொகு
இல. திருமுறை நூல் ஆசிரியர்
1 முதலாம் திருமுறை தேவாரம் திருஞானசம்பந்தர்
2 இரண்டாம் திருமுறை
3 மூன்றாம் திருமுறை
4 நான்காம் திருமுறை திருநாவுக்கரசர்
5 ஐந்தாம் திருமுறை
6 ஆறாம் திருமுறை
7 ஏழாம் திருமுறை சுந்தரர்
8 எட்டாம் திருமுறை திருவாசகம் மாணிக்கவாசகர்
திருக்கோவையார்
9 ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருமாளிகைத் தேவர்
சேந்தனார்
கருவூர்த் தேவர்
பூந்துருத்தி நம்பிகாடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புருடோத்தம நம்பி
சேதிராயர்
திருப்பல்லாண்டு சேந்தனார்
10 பத்தாம் திருமுறை திருமந்திரம் திருமூலர்
11 பதினோராம் திருமுறை திருமுகப் பாசுரம் திரு ஆலவாய் உடையார்
திருவாலங்காட்டுத் திருப்பதிகம் காரைக்கால் அம்மையார்
திருவிரட்டை மணிமாலை
அற்புதத்திருவந்தாதி
சேத்திர வெண்பா ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி சேரமான் பெருமான் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி நக்கீர தேவ நாயனார்
திருஈங்கோய்மலை எழுபது
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
பெருந்தேவபாணி
கோபப் பிரசாதம்
கார் எட்டு
போற்றித்திருக்கலிவெண்பா
திருமுருகாற்றுப்படை
திருக்கண்ணப்ப தேவர் திருமறம் கல்லாடதேவ நாயனார்
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
சிவபெருமான் திருஅந்தாதி
சிவபெருமான் திருவந்தாதி பரணதேவ நாயனார்
சிவபெருமான் மும்மணிக்கோவை இளம்பெருமான் அடிகள்
மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை அதிராவடிகள்
கோயில் நான்மணிமாலை பட்டினத்துப் பிள்ளையார்
திருக்கழுமல மும்மணிக்கோவை
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
திருவேகம்பமுடையார் திருவந்தாதி
திருவொற்றியூர் ஒருபா ஒருபது
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை நம்பியாண்டார் நம்பி
கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
திருத்தொண்டர் திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
12 பன்னிரண்டாம் திருமுறை பெரியபுராணம் சேக்கிழார் பெருமான்

திருமுறைகளில் பாடல்களின் எண்ணிக்கை

தொகு
திருமுறை பாடியவர்(கள்) பாடல் எண்ணிக்கை
முதலாம் திருமுறை திருஞானசம்பந்தர் 1,469
இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தர் 1,331
மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் 1,358
நான்காம் திருமுறை திருநாவுக்கரசர் 1,070
ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசர் 1,015
ஆறாம் திருமுறை திருநாவுக்கரசர் 981
ஏழாம் திருமுறை சுந்தரர் 1,026
எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் 1,058
ஒன்பதாம் திருமுறை 9 ஆசிரியர்கள் 301
பத்தாம் திருமுறை திருமூலர் 3,000
பதினொன்றாம் திருமுறை 12 ஆசிரியர்கள் 1,385
பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் 4,286
மொத்தம் 18,280

திருமுறை பாடிய சான்றோர்கள்

தொகு

சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

 

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

சேக்கிழார்


  சைவம் வலைவாசல்

வரிசை திருமுறையாசிரியர் திருமுறை பாடல்கள்
1. திருஞான சம்பந்தர் 1,2,3 4158
2. திருநாவுக்கரசர் 4,5,6 3066
3. சுந்தரர் 7 1026
4. மாணிக்கவாசகர் 8 1058
5. திருமாளிகை தேவர் 9 45
6. கண்டராதித்தர் 9 10
7. வேணாட்டடிகள் 9 10
8. சேதிராசர் 9 10
9. பூந்துருத்தி நம்பிகாடநம்பி 9 12
10. புருடோத்தம நம்பி 9 22
11. திருவாலியமுதனார் 9 42
12. சேந்தனார் 9 47
13. கருவூர்த்தேவர் 9 103
14. திருமூலர் 10 3000
15. திருவாலவாயுடையார் 11 1
16. கல்லாடதேவ நாயனார் 11 1
17. அதிராவடிகள் 11 23
18. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் 11 24
19. இளம்பெருமான் அடிகள் 11 30
20. பரணதேவ நாயனார் 11 101
21. சேரமான் பெருமான் நாயனார் 11 11
22. கபிலதேவ நாயனார் 11 157
23. காரைக்கால் அம்மையார் 11 143
24. பட்டினத்துப் பிள்ளையார் 11 192
25. நக்கீர தேவ நாயனார் 11 199
26. நம்பியாண்டார் நம்பி 11 382
27. சேக்கிழார் 12 4286

இவற்றையும் காண்க

தொகு
 • சுவாமிகள், திருஞான சம்பந்தர். "Campantar Tevaram -1 part 1, patikams 1-66" (PDF). projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
 • சுவாமிகள், திருஞான சம்பந்தர். "Campantar Tevaram -1 part 2, patikams 67-136" (PDF). projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
 • சுவாமிகள், திருஞான சம்பந்தர். "Campantar Tevaram -2 part 1, patikams 1-60" (PDF). projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
 • சுவாமிகள், திருஞான சம்பந்தர். "Campantar Tevaram -2 part 2, patikams 61-122" (PDF). projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
 • சுவாமிகள், திருஞான சம்பந்தர். "Campantar Tevaram -3 part 1, patikams 1-66" (PDF). projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
 • சுவாமிகள், திருஞான சம்பந்தர். "Campantar Tevaram -3 part 2, patikams 67-125 & later additions" (PDF). projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
 • சுவாமிகள், திருநாவுக்கரசர். "Tevaram of Tirunavukkaracu Cuvamikal Tirumurai 4 part - 1 Poems(1-487)" (PDF). projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
 • சுவாமிகள், திருநாவுக்கரசர். "Tevaram of Tirunavukkaracu Cuvamikal Tirumurai 4 part - 2 Poems(488-1070)" (PDF). projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
 • சுவாமிகள், திருநாவுக்கரசர். "Tevaram of Tirunavukkaracu Cuvamikal Tirumurai 5 part - 1 Poems(1-509)" (PDF). /projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
 • சுவாமிகள், திருநாவுக்கரசர். "Tevaram of Tirunavukkaracu Cuvamikal Tirumurai 5 part - 2 Poems(510-1016)" (PDF). /projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
 • சுவாமிகள், திருநாவுக்கரசர். "Tevaram of Tirunavukkaracu Cuvamikal Tirumurai 6 part - 1 Poems(1-508)" (PDF). projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
 • சுவாமிகள், திருநாவுக்கரசர். "Tevaram of Tirunavukkaracu Cuvamikal Tirumurai 6 part - 2 Poems(509-981)" (PDF). projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
 • சுவாமிகள், சுந்திரமூர்த்தி நாயனார். "Tevaram of Tirunavukkaracu Cuvamikal Tirumurai 7, part 1 Poems (1-517)" (PDF). projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.
 • சுவாமிகள், சுந்திரமூர்த்தி நாயனார். "Tevaram of Tirunavukkaracu Cuvamikal Tirumurai 7, part 2 Poems (518-1026)" (PDF). projectmadurai.org. பார்க்கப்பட்ட நாள் 5 October 2014.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவத்_திருமுறைகள்&oldid=3796064" இலிருந்து மீள்விக்கப்பட்டது