பஞ்சாபித் திருவிழாக்கள்

பஞ்சாபியர் ஓரளவுச் சமயநீக்கப் பொருண்மையுள்ள பல திருவிழாக்களைக் கொண்டாடி வருகின்றனர், இவை பண்பாட்டுத் திருவிழாக்களாக அனைத்து சமய மக்களாலும் கொண்டாடப்படுகின்றன. திருவிழா கொண்டாட்ட நாள் பஞ்சாபியர் கால அட்டவணைப்படி முடிவு செய்யப்படுகின்றன.

வசந்தப் பட்டம்

பஞ்சாபித் திருவிழாக்கள் கீழே பட்டியலிடப்படுகின்றன.

பஞ்சாபியர் திருவிழாக்கள்

தொகு
 
மகிக்கான கீர் எனும் பாற்கஞ்சி

மகரச் சங்கராந்தி பஞ்சாபியர்களால் அடிக்கடி மகி என்றே அழைக்கப்படுகிறது. மக்கள் குருதுவாரா அல்லது மந்திர் போன்ற கோயில்களுக்குச் செல்கின்றனர். இவ்விழாவில் இருந்து பகலில் வெளிச்சம் கூடும். கீர் எனும் பாற்கஞ்சி உண்டு விழாவைக் கொண்டாடுவர்.[1] விளையாட்டுப் போட்டிகள் இப்பகுதிகளில் நடத்தப்படுகின்றன.

உலோகிரி

தொகு
 
உலோகிரித் தீ

உலோகிரி என்பது மரபாக பனிக்காலத்தில் கரும்பு அறுவடை நடக்கும் பனிக்காலத் திருவிழாவாகப் பஞ்சாப் பகுதியில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை பனிக்காலக் கதிர்திரும்பும் நாளாகவும் குறிப்பாகக் கொண்டாடப்படுகிறது; மேலும் இது உழவர்களின் நிதியாண்டின் இறுதி நாளாகும்.[2]

 
வசந்தத்தில் பறக்கும் பட்டம்

வசந்தப் பட்டத் திருவிழா இளவேனிலாம் வசந்த காலத்தை வரவேற்கும் பருவத் தொடக்க விழாவாகும்.[3] இந்நாளில் மரபார்ந்த வண்ணம் மஞ்சளாகும்; செய்யப்படும் உணவு குங்குமப்பூ சாதமாகும்.

ஃஓலி

தொகு
 
இந்தியா –ஃ ஒலிப் பண்டிகை வண்ணப்பொடிக் கடைகள்- 7242

ஃஓலி என்பதும் ஓர் இளவேனில் பருவத் தொடக்கத்தைக் கொண்டாடும் விழாவாகும். இது எதிர்ப்படுபவர் மீது வண்ணப்பொடி தூவி விளையாடும் மகிழ்ச்சித் திருவிழாவாகும். இது இளவேனிலின் தொடக்கத்தைக் குறிக்கும் பஞ்சாபிய முதல் நிலாமாத நாளான சேத் நாளில் கொண்டாடப்படுகிறது .

வைசாகி

தொகு
 
மேளா (திருவிழா)

வைசாக்கி என்பது பஞ்சாபி அறுவடையும் புத்தாண்டும் கலந்த, பொங்கலை ஒத்த, திருவிழா ஆகும். இந்நாளில் பஞ்சாபெங்கிலும் திருவிழா கடைபிடிக்கப்படும்.

இராக்ரி (காப்புக்கட்டு)

தொகு
 
பாசக் கயிறு, இராக்ரி

இரக்சூபந்து எனும் காப்புக்கட்டு பஞ்சாப் பகுதியில் 'இராக்ரி' எனப்படும். இது இது அண்ணன் தம்பியர், அக்காத் தங்கையர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

தீயான் (ஊஞ்சல்)

தொகு
 
தீயன் என்பது மரங்களில் அல்லது பொதுமன்றங்களில் தொங்கும் ஊஞ்சல்களில் பெண்கள் ஆடிமகிழும் திருவிழாவாகும்.[4]

தீயான் என்பது பருவ மழைக் காலத்தினை வரவேற்கும் விழாவாகும். இது பஞ்சாபில் தீ எனும் நாளில் தொடங்கி 13 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்நாளில் பெண்டிரும் சிறுமியரும் கித்த நடனம் ஆடியபடி குடும்பங்களுக்கு வருகை தருவர்.

பஞ்சாப் அறுவடைத் திருவிழாக்கள்

தொகு

கீழ்வரும் திருவிழாக்கள் அறுவடைத் திருவிழாக்கள் ஆகும்:

உலோகிரி

தொகு
 
கரும்புத் துண்டுகள்

உலோகிரி என்பது பருப்பும் கொட்டையும் கரும்பும் அறுவடையாகும் பனிக்கால அறுவடைத் திருவிழா ஆகும்.

வைசாக்கி

தொகு
 
வைசாகி அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் முன் கோதுமைப் பயிரிட இழுவை எந்திரத்தால் உழுது நிலத்தைப் பண்படுத்தல்

வைசாக்கி என்பது பஞ்சாபில் இளவேனிற் காலக் கோதுமை அறுவடையைக் கொண்டாடும் திருவிழா ஆகும்.

தீபாவளி

தொகு
 
சால்களில் வளரும் பார்லி (கேத்ரி)

மேற்கோள்கள்

தொகு
  1. Sundar mundarye ho by Assa Singh Ghuman Waris Shah Foundation ISBN B1-7856-043-7
  2. [1] Singh, Hazara: Seasonal Festivals and Commemorative Days. Publisher: Hazara Singh Publications
  3. ASPECTS OF PUNJABI CULTURE S. S. NARULA Published by PUNJABI UNIVERSITY, INDIA, 1991
  4. About Teej