பஞ்சாப் இளைஞர் விழா

பாக்கித்தானில் ஆண்டுதோறும் நடைபெறும் விளையாட்டு விழா

பஞ்சாப் இளைஞர் விழா (Punjab Youth Festival ) பாக்கித்தான் நாட்டின் பஞ்சாபில் ஆண்டுதோறும் நடைபெறும் விளையாட்டு விழாவாகும். அக்டோபர் 20, 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதியன்று பஞ்சாப் முதல்வர் சாபாசு செரீப் இத்திருவிழாவைத் தொடங்கி வைத்தார். தொடக்க விழா லாகூரில் உள்ள தேசிய வளைகோல் பந்தாட்ட மைதானத்தில் அன்று நடைபெற்றது. விழாவின் போது, 42,813 மாணவர்கள் தேசிய கீதத்தைப் பாடினர், இது ஒரு கின்னசு உலக சாதனையாக ஆனது. இதற்கு முன் பதினைந்தாயிரம் பேர் பங்கேற்று தேசிய கீதம் பாடிய சாதனை இந்தியாவிடம் இருந்தது.

21 டிசம்பர் 2013 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 21 ஆம் தேதியன்றூ தேசிய சட்டமன்ற உறுப்பினர் அம்சா சாபாசு செரீப் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான மாகாண அமைச்சர் இராணா மசூத் அகமது கான் ஆகியோர் பஞ்சாப் இளைஞர் விழா 2014 இன் சின்னத்தை பஞ்சாப் விளையாட்டு வாரிய லாகூரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் வெளியிட்டனர். [1] [2]

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_இளைஞர்_விழா&oldid=3749474" இலிருந்து மீள்விக்கப்பட்டது