பஞ்சாப் மாநில மனித உரிமைகள் ஆணையம்

மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டபூர்வமான அமைப்பு

பஞ்சாப் மாநில மனித உரிமைகள் ஆணையம் (Punjab State Human Rights Commission) ஒரு சட்டப்பூர்வமான பொது அமைப்பாகும். இந்திய பஞ்சாபில் 1997 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.[1] 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம்[2] ஆணையத்திற்கு சட்டரீதியான அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. [3] பஞ்சாப் மாநில மனித உரிமைகள் ஆணையம் என்பது பஞ்சாபின் மாநிலத்திற்கு சொந்தமான மனித உரிமைகள் ஆணையமாகும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் இதற்குரிய பொறுப்புகளாகும். சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ள மற்றும் அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கின்ற அல்லது அனைத்துலக உடன்படிக்கைகளில் பொதிந்துள்ள தனிநபரின் வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கௌரவம் மற்றும் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களால் செயல்படுத்தப்படும். அனைத்து உரிமைகளையும் இந்த ஆணையம் மனித உரிமைகளாக கருதி செயல்படும்.

பின்னணி

தொகு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 எண் கீழ் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பஞ்சாப் மாநில மனித உரிமைகள் ஆணையத்தை அமைப்பதற்கான முடிவு 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் தேதி எடுக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு சூலை 16 ஆம் தேதி முதல் பஞ்சாப் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயல்பட்த் தொடங்கியது.[4]

தலைவர்களின் பட்டியல்

தொகு
வ..எண். பெயர் காலம்
1 நீதிபதி வி,கே. கண்ணா 16 சூலை 1997 15 சூலை 2002
2 நீதிபதி என்.சி. செயின் 27 பிப்ரவரி 2003 28 பிப்ரவரி 2006
3 நீதிபதி ஆர். எசு. மோங்கியா 12 நவம்பர் 2007 9 சூன் 2010
4 நீதிபதி சகதீசு பால்லா 22 மார்ச்சு 2011 22 மார்ச்சு 2016
5 நீதிபதி இக்பால் அகமது அன்சாரி 1 ஆகத்து 2017 பதவியில்

மேற்கோள்கள்

தொகு
  1. PSHRC Official website of Punjab State Human Rights Commission
  2. The Protection of Human Rights Act, 1993, as amended by the Protection of Human Rights (Amendment) Act, 2006
  3. "All about Protection of Human Rights Act, 1993 By: Shivani Johri". Latest Laws.
  4. About PSHRC pshrc.net