பஞ்சென் லாமா
பஞ்சென் லாமா (Panchen Lama, எளிய சீனம்: 班禅喇嘛; மரபுவழிச் சீனம்: 班禪喇嘛), அல்லது பஞ்சென் எர்தேனி (Panchen Erdeni, எளிய சீனம்: 班禅额尔德尼; மரபுவழிச் சீனம்: 班禪額爾德尼), திபெத்திய பௌத்த மதத்தின் கெலுக்பா பரம்பரையில் தலாய் லாமாவிற்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ள உயரிய பௌத்த ஆசான் (லாமா) ஆவார். கெலுக்பா பரம்பரையினரே 16வது நூற்றாண்டிலிருந்து 1959இல் திபெத்தியப் புரட்சி வரையிலும் மேற்கு திபெத்தை ஆண்டவர்களாவர். தற்போதைய (பதினொன்றாவது) பஞ்சென் லாமா குறித்து சர்ச்சை நிலவுகிறது; சீன மக்கள் குடியரசு அரசு கியான்சைன் நோர்பு என்பவரை பஞ்சென் லாமாவாக அறிவிக்க 14வது தலாய் லாமா மே 14, 1995இல் கெதுன் சோக்கைல் நியிமா என அறிவித்துள்ளார். ஆறு அகவையரான நியிமா அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே பொதுமக்கள் பார்வையிலிருந்து காணாமல் போனார். சீன அரசு அதிகாரிகள் இவரை மற்றவர்கள் திபெத்திற்கு வெளியே கூட்டிச்செல்லாதிருக்க தனது பாதுகாவலில் வைத்துள்ளதாக கூறுகின்றனர்.[1] [2] திபெத்தியர்களும் மனித உரிமைக் குழுக்களும் இவரது விடுதலையைக் கோரிப் போராடி வருகின்றனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ பஞ்சென் லாமா எங்கே உள்ளார்?
- ↑ Philippe Naughton October 17, 2011 10:46AM (2011-09-30). "China Says Missing Panchen Lama Living In Tibet". London: Timesonline.co.uk. http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article7053071.ece. பார்த்த நாள்: 2011-10-17.
- ↑ http://www.freepanchenlama.org/panchen-lama/
உசாத்துணைகள்
தொகு- Goldstein, Melvyn C. A History of Modern Tibet, 1913-1951: The Demise of the Lamaist State (1989) University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0520061408
- Goldstein, Melvyn C. The Snow Lion and the Dragon: China, Tibet, and the Dalai Lama (1997) University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-21951-1
- Kapstein, Matthew T. (2006). The Tibetans. Blackwell Publishing. Oxford, U.K. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-631-22574-4.
- Stein, Rolf Alfred. Tibetan Civilization (1972) Stanford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0804709017
வெளியிணைப்புகள்
தொகு- பஞ்சென் லாமாவை விடுதலை செய், பஞ்சென் லாமாவின் விடுதலையைக் கோரி போராட்ட வலைத்தளம்
- திபெத்திய சமூகம்,ஐக்கிய இராச்சியம் - பஞ்சென் லாமா குறித்தப் பின்னணி பரணிடப்பட்டது 2016-03-29 at the வந்தவழி இயந்திரம் http://www.tibet-society.org.uk/ இலிருந்து
- சீனா திபெத்தாலஜி எண். 03[தொடர்பிழந்த இணைப்பு], சீன அரசின் பஞ்சென் லாமா அவதாரத்தின் தேடல் முயற்சிகளையும் பிற விளக்கங்களையும் தருகின்ற http://www.tibet.cn/ வலைத்தளத்தில் உள்ள தொடர் கட்டுரைகள்:
- முகவுரை பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- திபெத்திய பௌத்ததில் வாழும் புத்தர்களாக அவதார முறைமை மற்றும் நடுவண் அரசுகளால் நிர்வகிக்கப்படுதல் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- புதிய வரலாற்று நிலையில் பதினொன்றாவது பஞ்சென் லாமாத் தேடலின் வெற்றியும் உறுதிப்படுத்தலும் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- திபெத்தின் காணாமல் போன சமய வழிகாட்டி, பிபிசி செய்தியின் மே 2005ஆம் ஆண்டு கட்டுரை
- திபெத்தின் 11வது பஞ்சென் லாமா பரணிடப்பட்டது 2009-10-05 at the வந்தவழி இயந்திரம், கெதுன் சோக்கைல் நியிமா குறித்த வலைத்தளம்
- பஞ்சென் லாமா இப்போது எப்படி இருபார் - புகைப்படங்கள்