பாஞ்ச் ஆறு

(பஞ்ச் ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாஞ்ச் ஆறு அல்லது பியான்ச் ஆறு (Panj (பாரசீக மொழி: رودخانه پنج‎) (/ˈpɑːn/; தாஜிக்: Панҷ, پنج), also known as Pyandzh or Pyanj (derived from its Russian name "Пяндж"), இது ஆமூ தாரியா ஆற்றின் துணை ஆறு ஆகும். பஞ்ச் ஆற்றின் நீளம் 921 கிலோமீட்டர்கள் (572 mi) மற்றும் வடிநிலப் பரப்பு 114,000 சதுர கிலோமீட்டர்கள் (44,000 sq mi) ஆகும்.[2]இந்த ஆறு ஆப்கானித்தானையும், தஜிகிஸ்தானை பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. [3]ஆப்கானித்தானின் வக்கான் மாவட்த்தின் வடக்கில் பாமிர் ஆறு மற்றும் வக்கான் ஆறுகள் கலந்து பஞ்ச் ஆறு உற்பத்தியாகிறது. பின்னர் பஞ்ச் ஆறு மேற்கில் பாய்ந்து ஆப்கானித்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லைகளாக அமைகிறது.[4] பின்னர் பஞ்ச் ஆறு தஜிகிஸ்தான் நாட்டின் கோருனோ-பதகுசான் தன்னாட்சி மாகாணத்தின் தலைமையிட நகரமான கோரோக் வழியாக பாய்கிறது. இவ்விடத்தில் பர்தாங் ஆறு பஞ்ச் ஆற்றுடன் கலக்கிறது. பின்னர் பஞ்ச் ஆறு தென்மேற்காக பாய்ந்து நடு ஆசியா மிகப்பெரிய ஆறான ஆமூ தாரியாவுடன் கலக்கிறது.

பாஞ்ச் ஆறு
தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானித்தான் பிரிக்கும் எல்லையாக பாயும் பாஞ்ச் ஆறு
அமைவு
நாடுகள்ஆப்கானித்தான் மற்றும் தஜிகிஸ்தான்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபஞ்ச் ஆறுடன் பாமிர் ஆறு மற்றும் வக்கான் ஆறுகள் கலக்கிறது.
முகத்துவாரம்ஆமூ தாரியா
 ⁃ ஆள்கூறுகள்
37°06′39″N 68°18′53″E / 37.11083°N 68.31472°E / 37.11083; 68.31472
நீளம்921 km (572 mi)
வடிநில அளவு114,000 km2 (44,016 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி1,000 m3/s (35,315 cu ft/s)
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிராமு தாரியா
Invalid designation
அலுவல் பெயர்பியாந்தி ஆற்றின் கீழ் பகுதி
தெரியப்பட்டது18 July 2001
உசாவு எண்1084[1]
பாஞ்ச் ஆற்றின் வான்பரப்புக் காட்சி
பஞ்ச் ஆறு

மேற்கோள்கள்

தொகு
  1. "Lower part of Pyandj River". Ramsar Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
  2. Пяндж (река), Great Soviet Encyclopedia
  3. "Pyanj River Basin Project". Asian Development Bank இம் மூலத்தில் இருந்து February 19, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110219044841/http://www.pyanjriverbasin.org/. 
  4. Pamir River
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஞ்ச்_ஆறு&oldid=3814699" இலிருந்து மீள்விக்கப்பட்டது