பஞ்ச இந்திரியத் தலங்கள்

பஞ்ச இந்திரியத் தலங்கள் என்பவை உடலிலுள்ள ஐந்து இந்திரியங்களுக்கு உரிய ஐந்து சிவாலயங்களாகும். [1] பஞ்ச இந்திரியங்கள் என்பவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளைக் குறிக்கின்றது. [2]

கோயில்கள் தொகு

திருமணிமுத்தாறு ஆற்றின் கரையில் இந்த ஐந்து கோயில்கள் உள்ளன. இக்கோயில்களை ஒரே நாளில் வழிபட நன்மை கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஒரே நாளில் வழிபட்டால் அனைந்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது நம்பிக்கையாகும். [3]

பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கையாகும்.

Caption text
வ.எண் கோயில் உறுப்பு
1 சேலம் சுகவனேசுவர் கோயில் கண்
2 உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோயில் காது
3 பில்லூர் வீரட்டேஸ்வரர் கோயில் மூக்கு
4 மாவுரெட்டி பீமேஸ்வரர் கோயில் வாய்
5 நஞ்சை இடையாறு திருவேலீஸ்வரர் கோயில் உடல்

தலபுராணம் தொகு

பஞ்ச பாண்டவர்களின் காலத்தில் அவர்களின் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல் பாதிக்கப்பட்டனர். 'வடதிசையில் உள்ள காட்டில் புருசாமிருகம் உள்ளதாகவும், அதனை பிடித்துவந்தால் பஞ்சம் தீரும்' என அசிரிரி கூறியது.

அதனால் பஞ்ச பாண்டவர்கள் அம்மிருகத்தை பிடித்தனர். அப்போது அம்மிருகம் அவர்களைத் தாக்கியது. திருமணிமுத்தாற்று கரையில் தர்மர் ஒரு லிங்கம் செய்து வழிபடவும் அந்த லிங்கத்தை சுற்றிவந்து வழிபட்டது. இவ்வாறு பஞ்ச பாண்டவர்கள் ஐந்து இடங்களில் லிங்கம் செய்து வழிபட்டனர்.

ஆதாரங்கள் தொகு

  1. Correspondent, Vikatan (31 டிச., 2009). "ஆலயம் தேடுவோம்!". https://www.vikatan.com/. {{cite web}}: Check date values in: |date= (help); External link in |website= (help)
  2. "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts". www.dinamalar.com.
  3. "Paramathi Bheemeswarar Temple : Paramathi Bheemeswarar Paramathi Bheemeswarar Temple Details | Paramathi Bheemeswarar - Paramathi Velur | Tamilnadu Temple | பரமத்தி பீமேஸ்வரர்". temple.dinamalar.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_இந்திரியத்_தலங்கள்&oldid=3725601" இலிருந்து மீள்விக்கப்பட்டது