பஞ்ச காவியங்கள்
பஞ்ச காவியங்கள் (Pancha Kavyas) என்பது தெலுங்கு இலக்கியத்தின் ஐந்து சிறந்த புத்தகங்களாகக் கருதப்படுகிறது. அவை பின்வருமாறு:
- 16 ஆம் நூற்றாண்டு மன்னரும் கவிஞரும், தெலுங்கு இலக்கியத்தின் புரவலருமான கிருஷ்ணதேவராயன் இயற்றிய ஆமுக்தமால்யதா.
- கிருஷ்ணதேவராயனின் அரசவைக் கவிஞரான அல்லசாணி பெத்தண்ணா எழுதிய மனு சரித்திரம்.[1]
- கிருஷ்ணதேவராயரின் அரசவைக் கவிஞரான தெனாலி ராமகிருஷ்ணன் எழுதிய பாண்டுரங்க மகாத்மியம்.
- கிருஷ்ணதேவராயனின் மருமகனும் 16 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர் பேரரசை ஆண்ட மன்னனுமான திருமலை தேவ ராயனின் அரசவைக் கவிஞர் இராமராஜ பூஷன் இயற்றிய வசு சரித்திரம்.[2]
- 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் நாயக்க வம்சத்தின் மூன்றாவது மன்னன் இரகுநாத நாயக்கரின் அரசவைக் கவிஞர் சேமகுரா வெங்கட கவி இயற்றிய விஜய விலாசமு.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Allasani Peddana". vedapanditulu.net. Archived from the original on 4 August 2012. பார்க்கப்பட்ட நாள் 1 March 2008.
- ↑ Sonti, Venkata Suryanarayana Rao. "Panchakavyas in Telugu Literature". mihira.com. Archived from the original on 3 May 2005. பார்க்கப்பட்ட நாள் 2 March 2008.
- ↑ D.Anjaneyulu, Glimpses of Telugu Literature: Leaders and Landmarks, Writers Workshop, 1987, pp 145
- ↑ Various, Indian Literature, சாகித்திய அகாதமி, 1957, pp 88,89