பஞ்ச பட்சி சாத்திரம்

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.[1] இதனை சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறியதாக நம்பிக்கை.[1] இந்தக் கலையை அறிந்தோர் எதிரிகளை வெல்வர் என்பது நம்பிக்கையாகும். இதனால் கத்திக்கட்டு சேவல் சண்டை, கிடா சண்டை, சிலம்பம் போன்ற விளையாட்டுகளினை விளையாடுவதற்கு காலம் மற்றும் வெற்றி வாய்ப்பினை கணிக்க இந்த பட்ச பட்சி சாஸ்திரத்தினை கற்கின்றனர். பஞ்ச பட்சி சாத்திரத்தினைக் கொண்டு ஐந்து பறவைகளின் குணநலன்களை மனிதனோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உள்ளது. இம்முறையில் ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது. பஞ்ச பட்சிகள் எனக் கூறப்படும் பறவைகளாவன, வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்பனவாகும்.

குரு வழி தொகு

பட்சிபட்சி சாஸ்திரம் குருவழியாக சீடர்களுக்கு கூறப்பட்டு வந்தது. இந்த சாஸ்திரத்தின் தோற்றம் மற்றும் நூலாக்கம் பற்றி இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தினை சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினார். பார்வதி தேவி சூர சம்ஹாரத்தினை நிகழ்த்துவதற்காக முருகனிடமும், முருகப் பெருமான் அகத்தியர் போன்ற சித்தர்களுக்கும் இக்கலையை எடுத்துரைத்தனர்.[1]

சித்தர்கள் தங்களின் சீடர்களுக்கு கற்பித்தனர். இவ்வாறாக குரு வழியிலேயே பஞ்ச பட்சி சாஸ்திரம் கூறப்பட்டு வந்துள்ளது. இந்த குரு முறை குறித்து நிலவும் மற்றொரு கருத்து.. சிவபெருமான் பார்வதி தேவிக்கு பட்சி சாஸ்திரத்தினை சொல்ல, பார்வதி தேவி நந்தியிடம் சொல்ல, நந்திதேவர் போகரிடம் சொல்ல, போகர் பஞ்சபட்ச சாஸ்திரம் என்ற நூலை தந்தார். அதன் பிறகு போகரின் சீடரான உரோமரி போகர் கூறுவதைக்கேட்டு உரோமரிசியும் பஞ்ச பட்சி குறித்தான ஓர் நூலை இயற்றியுள்ளார்.[2] உரோமரிசி இயற்றிய நூலுக்கு வினாடி பஞ்சபட்சி சாஸ்திரம் என்று பெயர்.

பழமையான நூல்கள் தொகு

எண் ஆசிரியர் நூல் பெயர்
1 அகத்தியர் பஞ்ச பட்சி

சாஸ்திரம்

2 காகபுசுண்டர் பஞ்ச பட்சி

சாஸ்திரம்

3 போகர் பஞ்ச பட்சி

சாஸ்திரம்

4 உரோமரிசி வினாடி பஞ்ச பட்சி

சாஸ்திரம்

பஞ்ச பட்சிகள் தொகு

பஞ்ச என்றால் ஐந்தினைக் குறிக்கும். பட்சிகள் என்றால் பறவைகள். வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் என ஐந்து வகையான பறவைகளைக் கொண்டு இந்த சாஸ்திரம் கணிக்கப்படுகிறது.[1]

27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் என அனைத்தும் இந்த பஞ்ச பட்சிகளுக்குள் அடக்கம் என்று கூறுகிறார்கள்.[1]

வளர்பிறை பகல் தொழில் தொகு

வளர்பிறை பகல் தொழில் வளர்பிறை இரவு தொழில்
வாரம் பறவைகள் ஜாமம் 1 ஜாமம் 2 ஜாமம் 3 ஜாமம் 4 ஜாமம் 5 ஜாமம் 1 ஜாமம் 2 ஜாமம் 3 ஜாமம் 4 ஜாமம் 5
ஞாயிறு

செவ்வாய்

வல்லூறு ஊண் நடை அரசு துயில் சாவு சாவு நடை துயில் ஊண் அரசு
ஆந்தை நடை அரசு துயில் சாவு ஊண் அரசு சாவு நடை துயில் ஊண்
காகம் அரசு துயில் சாவு ஊண் நடை ஊண் அரசு சாவு நடை துயில்
கோழி துயில் சாவு ஊண் நடை அரசு துயில் ஊண் அரசு சாவு நடை
மயில் சாவு ஊண் நடை அரசு துயில் நடை துயில் ஊண் அரசு சாவு

நட்சத்திரங்களுக்கான பறவைகள் தொகு

வரிசை எண் நட்சதிரத்தின் பெயர்கள் உரிய பறவை
1 அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிசம் வல்லூரு
2 திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் ஆந்தை
3 உத்தரம், ஹஸ்தம். சித்திரை, சுவாதி, விசாகம் காகம்
4 அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் கோழி
5 திருவோணம், அவிட்டம், சதயம் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி மயில்

படுபட்சி நாள் தொகு

இந்த சாத்திரத்தில் படுபட்சி நாள் என்றொரு சொல்லாக்கம் உள்ளது. இது பறவையின் எதிர்மறை நாளைக் குறிப்பதாகும். இந்நாளில் பறவைக்கு உரிய நபர்களுக்கு நாள் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கையாகும்.

தொடர்புடைய நூல்கள் தொகு

  • பஞ்சபட்சி சாஸ்திரம் - பிரகஸ்பதி - நர்மதா பதிப்பகம்
  • பஞ்சபட்சி சாஸ்திரம்- மணிமேகலை பிரசுகம் [3]
  • போகமுனிவர் பஞ்ச பட்சி சாஸ்திரம் உரையுடன் - ஆர்.சி.மோகன் - தாமரை நூலகம்
  • உரோமரிஷி வினாடி பஞ்சபட்சி சாஸ்திரம் - ஆர்.சி.மோகன் - தாமரை நூலகம்[4]
  • பஞ்சபட்சி சாத்திரம் - டாக்டர். புலிப்பாணி சுந்தரவரதாச்சாரியார் - தஞ்சாவூர் சரஸ்வதி மஹால், நூலக வெளியீட்டு எண் 213

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 கட்டுரை:- அதி அற்புதம் வாய்ந்த பஞ்சபட்சி சாஸ்திரம், வியாபாரத்திலும், வாழ்க்கையிலும் வெற்றிதரும் அற்புத கலை. ஆன்மீகமலர்.காம் 26 செப்டம்பர் 2017
  2. போகமுனிவர் பஞ்ச பட்சி சாஸ்திரம் உரையுடன்- ஆசிரியர் ஆர்.சி.மோகன். தாமரைப் பதிப்பகம் பக்கம் 4
  3. "பஞ்ச பட்சி சாஸ்திரம் » Buy tamil book பஞ்ச பட்சி சாஸ்திரம் online".[தொடர்பிழந்த இணைப்பு]
  4. https://books.dinamalar.com/details.asp?id=3627

வெளி இணைப்புகள் தொகு

பஞ்சபட்ஷி பரணிடப்பட்டது 2019-02-19 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_பட்சி_சாத்திரம்&oldid=3817035" இலிருந்து மீள்விக்கப்பட்டது