படியாக்க நீக்கம்

நோயெதிர்ப்பியலில் படியாக்க நீக்கம் (Clonal Deletion) என்பது தன்னுடல் தாக்கும் திறனுள்ள "டி" மற்றும் "பி" வெள்ளையணுக்களை நோய் எதிர்ப்பு அமைப்பு தொகுதியிலிருந்து அகற்றும் செயல்முறையாகும்.[1][2] இம்முறையானது, நம் உடலுக்குச் சொந்தமான செல்களை நோயெதிர்ப்பு உயிரணுக்கள் அடையாளம் கண்டு அழிப்பதைத் தடுக்க உதவுகிறது. இம் முறையை "எதிர்முறை தேர்வு" (negative selection) எனலாம். இப் படியெடுப்பு நீக்கம், உடலின் மையப் பொறுதியில் (சகிப்புத்தன்மையில்) முக்கியப் பங்காற்றுகிறது.[3] படியெடுப்பு நீக்கம், தன்னுடல் தாக்குநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சகிப்புத்தன்மையின்போது ஓம்புயிரியால் பயன்படுத்தப்படும் பல முறைகளில் படியெடுப்பு நீக்கமும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Russell, John H. (1998-01-01), "Clonal Deletion", in Delves, Peter J. (ed.), Encyclopedia of Immunology (Second Edition), Oxford: Elsevier, pp. 569–573, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-226765-9, பார்க்கப்பட்ட நாள் 2024-04-23
  2. Rose, Noel R. (2015). "Molecular mimicry and clonal deletion: A fresh look". Journal of Theoretical Biology 375: 71–76. doi:10.1016/j.jtbi.2014.08.034. பப்மெட் சென்ட்ரல்:4344433. https://doi.org/10.1016/j.jtbi.2014.08.034. 
  3. Jenni., Punt; A., Stranford, Sharon; P., Jones, Patricia; Janis., Kuby (2013-01-01). Kuby immunology. W.H. Freeman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4292-1919-8 இணையக் கணினி நூலக மையம் 820117219
"https://ta.wikipedia.org/w/index.php?title=படியாக்க_நீக்கம்&oldid=4181712" இலிருந்து மீள்விக்கப்பட்டது