படைத்துறைத் தொழிற்கூட்டு
படைத்துறைத் தொழிற்கூட்டு, அல்லது இராணுவத் தொழிற்கூட்டு அல்லது படைத்துறைத் தொழிற்துறை கூட்டுத்தொகுதி (military-industrial complex (MIC)), என்பது அரசு, படைத்துறை, தொழிற்துறை ஆகியவை எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு நாட்டின் அரசியல் ஆதரவை போர் ஆள் ஆயுத விருத்தி உற்பத்தி ஆய்வுக்கு குவியப்படுத்துகின்றன என்பதை விளக்கும் ஒரு கருத்துரு ஆகும். இந்த சொற்தொடரை அமெரிக்க ஜனாதிபதி டுவைட் டி. ஐசனாவர் முதன்முதலில் பயன்படுத்தினார். அவர் இந்த கூட்டுத்தொகுதி எவ்வாறு பொதுமக்கள் நலன்களுக்கு கேடு விளைவிக்க கூடிய வண்ணம் இயங்கலாம் என்றும் எச்சரிக்கை செய்தார்.