பட்சிராஜா பிலிம்ஸ்
தமிழக திரைப்பட நிறுவனம்
பட்சிராஜா பிலிம்ஸ் (Pakshiraja Films) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இருந்த ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். இது திரைப்பட இயக்குநர் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடுவுக்கு சொந்தமானது. 1937 முதல் 1945 வரை நிறுவனம் செண்ட்ரல் ஸ்டுடியோவில் இருந்து திரைப்படங்களை வெளியிட்டது. ஆனால் பின்னர் 1945 முதல் நிறுவனம் தனது சொந்த திரைப்பட படப்பிடிப்பு வளாகமாக பட்சிராஜா ஸ்டுடியோஸ் என்ற பெயரில் படப்பிடிப்பு வளாகத்தை வைத்திருந்தது.