சென்ட்ரல் ஸ்டுடியோஸ்

தமிழ்நாட்டின் கோவையில் இருந்த திரைப்பட படப்பிடிப்பு வளாகம்
(செண்ட்ரல் ஸ்டுடியோஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செண்ட்ரல் ஸ்டுடியோஸ் (Central Studios) என்பது தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழித் திரைப்படத் தயாரிப்புதற்காக உருவாக்கப்பட்ட திரைப்பட படப்பிடிப்பு வளாகம் ஆகும். இதை 1935 இல் பி. ரங்கசாமி நாயுடு (ஏ.கே.ஏ. பி.ஆர். நாயுடு) மற்றும் தமிழகத் திரைப்படத்துறையைச் சேர்ந்த சாமிக்கண்ணு வின்சென்ட் போன்ற பிற முக்கிய தொழிலதிபர்களால் தொடங்கப்பட்டது. இந்த படப்பிடிப்பு வளாகமானது கோமுத்தூர் இந்த படப்பிடிப்பு வளாகம் கோயம்புத்தூரின் சிங்காநல்லூரில் செயல்பட்டது. இது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பின் முக்கிய மையமாக இருந்தது. பல ஆரம்பகால தமிழ்த் திரைப்பட உச்ச நட்சத்திரங்கள், இயக்குநர்கள், திரை எழுத்தாளர்கள் மற்றும் பலர் தங்கள் தொழில் வாழ்க்கையை இங்கிருந்து துவக்கியதால் குறிப்பிடத்தக்கது. சிவகவி, வேலைக்காரி, ஹரிதாஸ் போன்ற படங்களினால் இந்த படப்பிடிப்பு வளாகம் சிறப்பாக நினைவில் நிற்கிறது .

செண்ட்ரல் ஸ்டுடியோஸ்
முன்னைய வகைமேனேஜிங் ஏஜென்சி, பின்னர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்[1]
நிறுவுகை1935
செயலற்றது1958 (de facto)[2]
தலைமையகம்திருச்சி சாலை, சிங்காநல்லூர், கோயம்புத்தூர்
முதன்மை நபர்கள்பி. ரங்கசாமி நாயுடு, ஸ்ரீராமுலு நாயுடு, சாமிகண்ணு வின்சென்ட், ஆர். கே. ராமகிருஷ்ணன் செட்டியார், லட்சுமி ஆலைகள்
தொழில்துறைதிரைப்படங்கள்

வரலாறு

தொகு

கோவையில் திரையுலகம்

தொகு
 
சாமிகண்ணு வின்சென்ட்

தென்னிந்திய இரயில்வே ஊழியரான சாமிகண்ணு வின்சென்ட் ஒரு சுற்றுலா கண்காட்சியில் டு பான்ட் என்ற பிரெஞ்சுக்காரரிடம் இருந்து சில மௌனப் படங்களையும் ஒரு திரைப்பட ஒளிப்படக்காட்டியையும் (ப்ரொஜெக்டர) 1905 ஆம் ஆண்டில் வாங்கினார். அதன் பிறகே கோயம்புத்தூரில் திரைப்பத் துறை என்பது ஒரு முக்கிய தொழிலாக மாறியது. பின்னர் சாமிகண்ணு வின்சென்ட் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, தற்காலிக கூடாரங்களை அமைத்து அதில் திரைப்படங்களை திரையிட்டு ஒரு வணிகமாக அதை உருவாக்கினார். அவர் தனது நடமாடும் திரைப்பட அலகு மூலம் நாடு முழுவதும் பயணம் செய்ததால் அவரது கூடார திரைப்படம் பிரபலமடைந்தது. 1917 இல், சாமிகண்ணு வின்சென்ட் தென்னிந்தியாவின் முதல் நிரந்தர திரையரங்கான வெரைட்டி ஹால் சினிமாவை நகர மண்டபத்தில் கட்டினார்; அது இப்போது ஆட் டெலைட் தியேட்டர் என்று அழைக்கப்படுகிறது. சாமிகண்ணு வின்சென்ட் தனது திரையரங்குகளுக்கு சொந்தமாக மின்சாரத்தை தயாரித்துக் கொண்டதால், ஊமைப் படங்களைத் திரையிடுவதற்காக நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ச்சியாக திரையரங்குகளைக் கட்டினார். மேலும் இவர் பிரெஞ்சு Pathé Frères திரைப்பட ஒளிப்படக்காட்டிகளின் விநியோகத்தராகவும் ஆனார். 1930 களின் முற்பகுதியில் அவர் ஒலி திரைப்படத்தை உருவாக்க வெரைட்டி ஹால் டாக்கீஸ் என்ற பதாகையின் கீழ் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். ஒரு திரைப்பட படப்பிடிப்பு வளாகம் வேண்டும் என்று உணர்ந்த இவர், மற்ற தொழில்துறையினர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் இணைந்து, கோயம்புத்தூரில் ஒரு முழுமையான படப்பிடிப்பு வளாகத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார்.

1920 களின் பிற்பகுதியில், சபாபதி என்பவரின் வேரொரு நிறுவனம் இத்தாலிய திரைப்பட ஒளிப்படக்காட்டி நிறுவனத்தின் விநியோகத்தில் ஈடுபட்டது. இறுதியில் கோயம்புத்தூரில் இவர்களின் சொந்த நிறுவனத் தயாரிப்பில் திரைப்பட ஒளிப்படக்காட்டிகளை தயாரிக்கும் நிலைக்கு வந்தனர். முப்பதுகளின் முற்பகுதியில், கோயம்புத்தூரில் ஏற்கனவே பிரீமியர் சினிடோன் ஸ்டுடியோ [3] (பின்னர் பட்சிராஜா ஸ்டுடியோஸ் என பெயர் மாற்றப்பட்டது) என்ற படப்பிடிப்பு வளாகம் இருந்தது. 1935 ஆம் ஆண்டில், இலண்டனில் படித்த பட்டதாரியான டி. ஆர். சுந்தரம், சேலத்தில் ஒரு முழுமையான திரைப்பட படப்பிடிப்பு வளாகமான, மாடர்ன் தியேட்டர்சை கட்டினார். இதனால் மேலும் இப்பகுதி திரைப்படத் தொழிலுக்கான மையமாக மாறியது.

படப்பிடிப்பு வளாகம் துவக்கம்

தொகு

சென்ட்ரல் ஸ்டுடியோ பிரபல தொழிலதிபர்களான பி. அரங்கசாமி நாயுடு, ஆர். கே. இராமகிருஷ்ணன் செட்டியார் (இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியாரின் சகோதரர்), சாமிக்கண்ணு வின்சென்ட் மற்றும் மற்றொரு புதிய திரைப்பட இயக்குனரான எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு (இவர் உழைக்கும் பங்குதாரராக சேர்ந்தார்) ஆகியோரால் நிறுவப்பட்டது. படப்பிடிப்பு வளாகத்தின் செயல்பாடு 1936 இல் தொடங்கியது. இவர்களின் முதல் வெளியீடு 1937 இல் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கிய துக்கரம் ஆகும். 1940 களின் முற்பகுதியில் படப்பிடிப்பு வளாகம் தமிழ்த் திரைப்படத் துறையின் மையமாக மாறியது.

கோயம்புத்தூர் மாநகரில் திருச்சி சாலைக்கு அருகில் சிங்காநல்லூரில் படப்பிடிப்பு வளாகம் இருந்தது. படப்பிடிப்பு வளாகத்தில் ஒரு திரைப்படப் படப்பிடிப்புத் தளத்துக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் ஒலி மற்றும் திரைப்பட படத்தொகுப்பகம் மற்றும் தொழில்நுட்பப் பட்டறைகளும் இருந்தன. 30களில் ஒலிப் பொறியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் ஜேர்மனியர்களாகவும் பெரும்பாலான ஒப்பனைக் குழுவினர் பம்பையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.[4] படப்பிடிப்பு வளாகத்தில் எஸ். எம். சுப்பையா நாயுடு தலைமையில் ஒரு இசைத் துறையும் இருந்தது. படப்பிடிப்பு வளாகமானது பி.என்.சி. மிட்செல் ஒளிப்படமியை கொண்ட பெருமையுடன் இருந்தது. இது 1930களில் ரூ. 500,000 விலை கொண்டது. மேலும் 10 கி.வா, 5 கி.வா மற்றும் 2 கி.வா விளக்குகள் படப்பிடிப்பு வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்தது. பெரும்பாலான கலைஞர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் மாத ஊதியத்திற்கு பணிபுரிந்தனர்.

படப்பிடிப்பு வளாக அமைப்பு

தொகு

எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்து 1936 ஆம் ஆண்டு வெளிவந்த வெள்ளி விழா வெற்றித் திரைப்படமான சிவகவி உள்ளுரிலேயே தயாரிக்கப்பட்டது. அது பல வகையில் சமூக முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் ஆகும். சென்ட்ரல் ஸ்டுடியோ சில திரைப்படங்களை வெளியிட்டது, ஆனால் படப்பிடிப்பு வகாகமானது பல தயாரிப்பு பதாகைகைள் கொண்டிருந்தது. அவற்றில் மிகவும் பிரபலமானவை ஜுபிடர் பிக்சர்ஸ் மற்றும் பட்சிராஜா பிலிம்ஸ் ஆகியவை ஆகும். படப்பிடிப்பு வளாகத்துக்குள் இயங்கிய பிற தயாரிப்பு நிறுவனங்கள் நாராயணன் அண்ட் கம்பெனி, மனோரமா பிக்சர்ஸ், வேணு பிக்சர்ஸ் போன்றவை ஆகும். அப்போதைய பிரபல நகைச்சுவை நடிகர்கள் மூவரான என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. மதுரம் ஆகியோர் தங்களுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான அசோகா பிலிம்சை இதன் வளாகத்திற்குள் கொண்டிருந்தனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் நகைச்சுவைக் காட்சிகளை சொந்தமாக உருவாக்கி, பிற திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு விற்றனர்.

குறிப்பிடத்தக்க திரையுலகப் பிரமுகர்கள்

தொகு

இந்த படப்பிடிப்பு வளாகமானது துவக்க நாட்களில் தமிழ்த் திரைப்படங்களில் முதல் 'உச்ச நட்சத்திரங்களான' பி. யு. சின்னப்பா மற்றும் எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் பிரபல நகைச்சுவை நடிகர் என். எஸ். கிருஷ்ணன் மற்றும் டி. ஏ. மதுரம் ஆகியோரின் முதன்மை மையமாக இருந்தது. தமிழ்நாடு மாநில முதல்வர்களான சி. என். அண்ணாதுரை, மு. கருணாநிதி,[5] எம். ஜி. ராமச்சந்திரன் [6] வி. என். ஜானகி ஆகிய நால்வருக்கும் இந்த படப்பிடுப்பு வளாகம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருந்தது. இங்கு பிரபல இசைக்கலைஞரான எஸ். எம். சுப்பையா நாயுடு இருந்தார், அதே நேரத்தில் ஜி. ராமநாதன் பாபநாசம் சிவன், கே. வி. மகாதேவன் ஆகியோரும் இங்கு வந்து வேறு சில நிறுவனங்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் எஸ். எம். சுப்பையா நாயுடுவிடம் உதவியாளராக இருந்தவர். பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் [7] அவரது துவக்கக்காலத்தில் பின்னணிப் பாடகராக இங்குதான் களம் கண்டார். அதேபோல கண்ணதாசனும் இங்குதான் தன் துவக்கக் கால திரைவாழ்வை மேற்கொண்டார். 1954 இல் வெளியான சொர்க்க வாசலுக்கு இணை இயக்குநராக இருந்த முக்தா சீனிவாசன் போன்ற பல பிற்கால இயக்குநர்களுக்கும்,[8] படத்தொகுப்புப் பிரிவில் இருந்த கே. சங்கர் போன்றோருக்கு இந்த படப்பிடிப்பு வாளகம் தொடக்கத் தளமாக இருந்தது. டி. ஆர். ராஜகுமாரி, அஞ்சலிதேவி, யூ. ஆர். ஜீவரத்தினம், மாதுரி தேவி, ராஜசுலோசனா ஆகியோர் சென்ட்ரல் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட பல படங்களில் நடித்துள்ளனர்.[9] இங்கு எடுக்கப்பட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிகை சச்சு தோன்றியுள்ளார்.

இங்கு இருந்து இயங்கிய பிரபல இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு, எல்லிஸ் ஆர். டங்கன், ஏ. எஸ். ஏ. சாமி, ஏ. பி. நாகராசன் மற்றும் சென்ட்ரல் ஸ்டுடியோவில் தங்கள் முதல் திரைப்படத்தை இயக்கிய பராசக்தி புகழ் கிருஷ்ணன்-பஞ்சு ஆகிய பிரபல இரட்டையர்கள் போன்றோர் ஆவர். இந்தியாவின் முன்னோடி ஒளிப்பதிவாளர் ஆதி மெர்வான் இரானி [10] சிவகவி மற்றும் ஹரிதாஸ் ஆகிய படங்களுக்காக இங்கு பணியாற்றினார். இராமநாதபுரத்தில் வசித்த தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சாண்டோ சின்னப்பா தேவர், இந்தியாவின் வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறுவதற்கு முன்பு இங்கு சண்டைக் கலை நடிகராகப் பணியாற்றினார்.

இறுதி ஆண்டுகள்

தொகு

1945 ஆம் ஆண்டில் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு சென்ட்ரல் ஸ்டுடியோவை விட்டு வெளியேறி பட்சிராஜா ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தனது சொந்த படப்பிடிப்பு வளாகத்தைத் தொடங்கினார். பி. ரங்கசாமி நாயுடு குடும்பம் இதன் பெரும்பாலான பங்குகளை வாங்கியது. 1940களின் பிற்பகுதியில் இப்படப்பிடிப்பு வளாகத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது. பி. ஆர். நாயுடுவின் மறைவுக்குப் பிறகு, ஸ்டுடியோ நிர்வாகம் லட்சுமி ஆலைகள் குடும்பத்தின் வசம் வந்தது. சென்னை முக்கிய திரைப்பட மையமாக உருவெடுத்ததால், திரைப்படத் துறையினர் சென்னையை நோக்கி நகரத் துவங்கியதால் 1959 இல் படப்பிடிப்பு வளாகம் மூடப்பட்டது. பின்னர் இந்த இடம் தொழில் மற்றும் கல்வி மையமாக உருவனது. படப்பிடிப்பு வளாகத்தின் ஒரு பகுதி உபகரணங்களுடன் 1958 இல் மற்ற தயாரிப்பாளர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. மேலும் 1962 வரை திரைப்பட விநியோகத் தொழிலில் இந்நிறுவனம் ஈடுபட்டுவந்தது.

இன்றைய நாள்

தொகு

பி. ஆர். நாயுடு குடும்பத்தினர் பல்வேறு தொழில் நடவடிக்கைகளுக்கு இந்த வளாகத்தைப் பயன்படுத்துவதால், பெரும்பாலான ஸ்டுடியோ அமைப்பு இன்னும் அப்படியே உள்ளது. சில கட்டடங்களில் ஆடை உற்பத்தி அலகுகள் மற்றும் சிறிய பட்டறைகள் உள்ளன. 70கள் மற்றும் 80களில் பந்தயக் கார் உருவாக்குநரும் ஓட்டுநருமான எஸ். கரிவர்தன் தனது பந்தையக் கார்களை உருவாக்கவும் சோதனை செய்யவும் இந்த வளாகத்தைப் பயன்படுத்தினார்.

2009 வரை 'சென்ட்ரல் ஸ்டுடியோஸ்' என்ற பெயர் பலகையை இதன் பிரதான நுழைவு வாயிலில் காணப்பட்டது. அண்மையில் 2010ல் புதிய மேம்பாடுகளுக்கு வழி வகுக்கும் வகையில் சில கட்டமைப்புகள் மாற்றியமைக்கபட்டன. 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு, பி. ஆர். நாயுடுவின் குடும்ப உறுப்பினர்கள் ஸ்டுடியோ வளாகத்தைப் பிரித்துக் கொண்டனர். கட்டடங்கள் அப்படியே இருந்தாலும், அணுகு சாலைகள் தனித்தனியாக ஆக்கபட்டன.

முக்கிய வெளியீடுகளின் பட்டியல்

தொகு
# ஆண்டு பெயர் மொழி தயாரிப்பு முதன்மை நடிகர்கள் இயக்குநர் இசையமைப்பாளர் வெளியீட்டு நாள் - குறிப்பு
1 1938 துகாராம் தமிழ் செண்ட்ரல் ஸ்டுடியோஸ் முசிரி சுப்பிரமணிய ஐயர், சொக்கலிங்க பாகவதர், கே.சீதா, மீனாம்பாள் பி. நாராயண ராவ் ஆர். பாலசரஸ்வதி 17 செப் 1938 புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் முசிரி சுப்பிரமணிய ஐயரின் ஒரே படம்.
2 1938 துகாராம் தெலுங்கு செண்ட்ரல் ஸ்டுடியோஸ் சி.எ ஸ். ஆர்.ஆஞ்சநேயுலு, சொக்கலிங்க பாகவதர், கமலாபாய், பாலசரஸ்வதி எம். எல். தாண்டன் ஆர். பாலசரஸ்வதி 17 செப் 1938 தமிழ் பதிப்போடு சேர்த்து ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது
3 1939 ரம்பையின் காதல் தமிழ் செண்ட்ரல் ஸ்டுடியோஸ் கே. சாரங்கபாணி, கே.எல்.வி.வசந்தா, என். எஸ். கிருஷ்ணன் பி. நாராயண ராவ் செண்ட்ரல் ஸ்டுடியோஸ் இசைக்குழு 24 பெப் 1939 நகைச்சுவை நடிகர் டி. எஸ். துரைராஜின் அறிமுகப்படம்
4 1939 பிரகலாதா (1939 படம்) தமிழ் சேலம் சங்கர் பிலிம்ஸ் டி. ஆர். மகாலிங்கம், எம். ஆர். சந்தானலட்சுமி, ஆர். பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் கே. மகாதேவன், எம். ஜி. இராமச்சந்திரன், என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் பி. நாராயண ராவ் சர்மா பிரதர்ஸ் 12 திசம்பர் 1939
5 1940 பூலோக ரம்பை தமிழ் கே. எல். வி. வசந்தா, டி. கே. சண்முகம், டி. ஆர். மகாலிங்கம், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், குமாரி ருக்மினி பி. நாராயண் ராவ் ஜி. ராமநாதன் 14 சனவரி 1958 எஸ். எஸ். வாசன் ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்டை விநியோகஸ்தராகத் தொடங்கினார், விநியோகத்திற்காக திரைப்படங்களைத் தேடிக்கொண்டிருந்தார், கோயம்புத்தூரில் ராவை அழைத்து, அவர் படங்களுக்கு நிதியளித்தால் படத்தை தீபாவளிக்கு சரியான நேரத்தில் முடிக்க முடியுமா என்று கேட்டார்.
6 1940 நவீன விக்ரமாதித்தன் தமிழ் அசோகா பிலிம்ஸ் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், டி. எஸ். துரைராஜ், எம். ஆர். சுவாமிநாதன் கே. எஸ். மணி என். எஸ். பாலகிருஷ்ணன் 29 சூன் 1940
7 1941 சந்திரஹரி தமிழ் அசோகா பிலிம்ஸ் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், எல். நாராயண ராவ், காகா இராதாகிருஷ்ணன் கே. எஸ். மணி என். எஸ். பாலகிருஷ்ணன் இது ஒரு குறும்படமாக இருந்ததால், மற்றொரு படமான 'இழந்த காதல்' (பாகம் 1) படத்தின் 2-வது பாகம் இருந்தது.
8 1941 இழந்த காதல் தமிழ் அசோகா பிலிம்ஸ் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், கே. பி. காமாட்சி கே. எஸ். மணி என். எஸ். பாலகிருஷ்ணன், கே. எம். கௌரீசன் n/a
9 1941 சதி முரளி தமிழ் சென்ட்ரல் ஸ்டுடியோஸ், சபா பிலிம்ஸ் " எம். கே. ராதா, எம். ஆர். சந்தானலட்சுமி, டி. ஆர். மகாலிங்கம், நாகர்கோவில் கே. மகாதேவன், எல். நாராயண ராவ், காளி என். ரத்னம், எஸ். வரலட்சுமி, டி. ஏ. மதுரம் பி. நாராயண ராவ், டி.சி. வடிவேலு நாயக்கர் n/a
10 1941 அலிபாபாவும் 40 திருடர்களும் (1941 திரைப்படம்) தமிழ் அசோகா பிலிம்ஸ் "என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், எம். ஆர். சுவாமிநாதன், எஸ். வி. சகஸ்ரநாமம் கே. எஸ்.மணி என். எஸ்.பாலகிருஷ்ணன் 15 மார்ச் 1941
11 1941 ஆர்யமாலா பட்சிராஜா பிலிம்ஸ், கே. எஸ். நாராயணன் ஐயங்கார் பி. யு. சின்னப்பா , எம். எஸ். சரோஜினி, எம். ஆர். சந்தானலட்சுமி, என். எஸ். கிருஷ்ணன் போமன் இரானி ஜி. ராமநாதன் 19 Oct 1941
12 1942 பிருதிவிராஜன் தமிழ் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் + ஹரன் டாக்கீஸ் பி. யு. சின்னப்பா, ஏ. சக்ந்தலா, டி. எஸ். பாலையா, எம். ஆர். சந்தானலட்சுமி, என். எஸ். கிருஷ்ணன் பி. சம்பத்குமார் ஜி. ராமநாதன் 29 ஏப்ரல் 1942
13 1943 ஜீவன நாடகா கன்னடம் குப்பி பிலிம்ஸ் (குப்பி வீரண்ணா) குப்பி வீரண்ணா, கெம்பராஜ் அர்ஸ், சாந்தா ஹூப்ளிகர், பி. ஜெயம்மா வஹாப் காஷ்மீரி எஸ். வி. வெங்கட்ராமன், ராமய்யர் ஷிரூர், ஹார்மோனியம் சேஷகிரிராவ் 01 சனவரி 1943 மைசூர் மாநிலத்தின் வருங்கால முதலமைச்சர் தேவராஜா அரசுவின் சகோதரர் தேவராஜா அரசு படத்தில் நடிகராக அறிமுகமானார்.
14 1943 சிவகவி தமிழ் சென்ட்ரல் ஸ்டுடியோஸ், பட்சிராஜா பிலிம்ஸ் எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். ஜெயலட்சுமி, டி. ஆர். ராஜகுமாரி, என். எஸ். கிருஷ்ணன் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு பாபநாசம் சிவன் 10 ஏப்ரல் 1943 பி. கே. இராசா சாண்டோ இயக்குனராக 1942ல் படப்பிடிப்பு தொடங்கியது.ராஜா சாண்டோவுக்கும் தயாரிப்பாளர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடுவுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பின்னர் இயக்கத்தை தானே ஏற்றுக்கொண்டார். திரைக்கதை இளங்கோவன். சென்னை மாகாணம் பெரும் வெற்றி பெற்றது.
15 1944 ஜகதலப்பிரதாபன் (1944 படம்) தமிழ் சென்ட்ரல் ஸ்டுடியோஸ், பட்சிராஜா பிலிம்ஸ் பி. யு. சின்னப்பா, எம். எஸ். சரோஜினி, எம். ஆர். சந்தானலட்சுமி, பி. பி. ரங்காச்சாரி, யூ. ஆர். ஜீவரத்தினம், எஸ். வரலட்சுமி, டி. ஏ. ஜெயலட்சுமி, டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு ஜி. ராமநாதன் 07 மார்ச் 1944
16 1944 ஹரிதாஸ் தமிழ் ராயல் டாக்கி டிஸ்டிபியூட்டர்ஸ் எம். கே. தியாகராஜ பாகவதர், டி. ஆர். ராஜகுமாரி, என். சி. வசந்தகோகிலம், என். எஸ். கிருஷ்ணன் சுந்தர் ராவ் நட்கர்னி பாபநாசம் சிவன், ஜி. ராமநாதன் 16 அக்டோபர் 1944 1944 தீபாவளிக்கு வெளியான பெரும் வெற்றிப் படச் சாதனைகளில் ஒன்று, இது 1945 மற்றும் 1946 தீபாவளிகளைத் தாண்டி 110 வாரங்கள் முழுக் காட்சிகளுடன் மெட்ராஸ் பிராட்வே திரையரங்கில் தொடர்ந்து ஓடியது.
17 1945 என் மகன் (1945 படம்) தமிழ் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் என்.கிருஷ்ணமூர்த்தி, யூ. ஆர். ஜீவரத்தினம், டி. பாலசுப்பிரமணியம், குமாரி கமலா, சி. கே. சரஸ்வதி ஆர். எஸ். மணி பாபநாசம் சிவன்,

சி. ஏ. லட்சுமண தாஸ்

16 பெப்ரவரி 1945
18 1945 சாலிவாகனன் தமிழ் பாஸ்கர் பிக்சர்ஸ் ரஞ்சன், டி. ஆர். ராஜகுமாரி, எம். ஜி. இராமச்சந்திரன், கே. எல். வி. வசந்தா, என். எஸ். கிருஷ்ணன் பி. நாராயண ராவ் நாகர்கோவில் கே.மகாதேவன் 04 நவம்பர் 1945 படத்தில் ரஞ்சன் மற்றும் டி.ஆர். ராஜகுமாரிக்கு இடையேயான காதல் காட்சி காட்சி இருந்தது.
19 1946 வால்மீகி தமிழ் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் சி. ஹொன்னப்ப பாகவதர், யூ. ஆர். ஜீவரத்தினம், டி. ஆர். ராஜகுமாரி, என். சி. வசந்தகோகிலம் சுந்தர் ராவ் நட்கர்ணி பாபநாசம் சிவன் 13 ஏப்ரல் 1946 முதலில் எம். கே. தியாகராஜ பாகவதர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 1944 இல் லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்கு முன்பு படப்பிடிப்புத் தொடங்கியது. பின்னர், சி. ஹொன்னப்ப பாகவதரைக் கொண்டு அனைத்து காட்சிகளும் மீண்டும் படமாக்கப்பட்டன.
20 1946 வித்யாபதி தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ் டி. ஆர். இராமச்சந்திரன், கே. தவமணி தேவி, டி. பாலசுப்பிரமணியம், எம். என். நம்பியார், டி. பிரேமாவதி ஏ. டி.கிருஷ்ணசுவாமி அட்டப்பள்ளி ராமராவ் 17 அக்டோபர் 1946
21 1946 ஸ்ரீ முருகன் தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ் கொன்னப்ப பாகவதர், கே. மாலதி, ம. கோ. இராமச்சந்திரன், யூ. ஆர். ஜீவரத்தினம், பி. எஸ். வீரப்பா, நரசிம்ம பாரதி, எம். ஜி. சக்கரபாணி, காளி என். ரத்தினம் எம். சோமசுந்தரம், வி. எஸ். நாராயணன் எஸ். எம். சுப்பையா நாயுடு, எஸ். வி. வெங்கட்ராமன் 27 Oct 1946
22 1947 அசோகமாலா சிங்களம் சர் சித்தம்பலம் ஏ. கார்டின் சாந்தி குமார், எமலின் டிம்புலான சாந்தி குமார், டி.ஆர். கோபு முகமது கவுஸ் 09 ஏப்ரல் 1947
23 1947 ராஜகுமாரி தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ் எம். ஜி. இராமச்சந்திரன், கே. மாலதி, எம். ஆர். சாமிநாதன், டி. எஸ். பாலையா, மா. நா. நம்பியார் ஏ. எஸ்.ஏ.சாமி எஸ். எம். சுப்பையா நாயுடு 11 ஏப்ரல் 1947
24 1947 கஞ்சன் தமிழ் ஜுபிடர் + செண்டரல் எஸ். வி. சுப்பையா, மா. நா. நம்பியார், பி. வி. நரசிம்ம பாரதி, கே. மாலதி, எம். எஸ்.எஸ். பாக்யம் கோவை ஏ. ஐயாமுத்து, டி. ஆர். கோபு 11 நவம்பர் 1947
25 1948 பில்ஹணன் தமிழ் டிகேஸ் பிரதர்ஸ் டி. கே. சண்முகம், டி. கே. பகவதி, எம். எஸ். திரௌபதி கே. வி. சீனிவாசன் டி. ஏ. கல்யாணம் 23 Apr 1948 கதை, திரைக்கதை ஏ. எஸ். ஏ. சாமி. டி. கே. எஸ். சகோதரர்கள் பாடிய "தூண்டிற் புழுவினைபோல்" பாடலில் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் வரிகள் பயன்படுத்தப்பட்டன. பாரதியின் அனைத்து படைப்புகளுக்கும் காப்புரிமை பெற்றிருந்த திரைப்பட தயாரிப்பாளர் ஏ. வி. மெய்யப்பன், டிகேஎஸ் பிரதர்ஸ் மீது உரிமை மீறல் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அப்போதைய மதராஸ் மாநில முதல்வர் ஓ. பி. இராமசாமி ரெட்டியார், பாரதியின் படைப்புகளின் உரிமைகளை வாங்கவும், பதிப்புரிமை அற்றதாகவும் முன்வந்தபோது சிக்கல் முடிவுக்கு வந்தது.
26 1948 அபிமன்யு (1948 திரைப்படம்) தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ் எம். ஜி. இராமச்சந்திரன், எஸ். எம். குமரேசன், எம். ஆர். சந்தானலட்சுமி, எம். ஜி.ச க்ரபாணி, பி. வி. நரசிம்ம பாரதி, மா. நா. நம்பியார் ஏ. எஸ் .ஏ. சாமி எஸ். எம். சுப்பையா நாயுடு, சி. ஆர். சுப்புராமன் 6 மே 1948
27 1948 மோகினி தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ், செண்டரல் ஸ்டுடியோஸ் டி. எஸ். பாலையா, மாதுரி தேவி , ம. கோ. இராமச்சந்திரன், வி. என். ஜானகி லங்கா சத்தியம் எஸ். எம். சுப்பையா நாயுடு, சி. ஆர். சுப்பராமன் 13 அக்டோபர் 1948
28 1949 வேலைக்காரி தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ் கே. ஆர். ராமசாமி, வி. என். ஜானகி, மா. நா. நம்பியார் ஏ. எஸ். ஏ. சாமி எஸ். எம். சுப்பையா நாயுடு, சி. ஆர். சுப்புராமன் 25 பெப்ரவரி 1949 திரைப்படமானது கா. ந. அண்ணாதுரையால் (பிற்கால தமிழக முதல்வர்) எழுதப்பட்டது. அவரது நாடகங்களை அடிப்படையாகக் கொண்ட அவரது இரண்டாவது படம் இது.
29 1949 கன்னியின் காதலி தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ் அஞ்சலிதேவி , மாதுரி தேவி , என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் கே. ராம்நோதந்த், ஏ. கே. சேகர் எஸ். எம். சுப்பையா நாயுடு, சி. ஆர். சுப்பராமன் 06 ஆகத்து 1949 இத்திரைப்படத்தில் புகழ்பெற்ற சகோதரிகளான லலிதா, பத்மினி ஆகியோரின் நடனக் காட்சி இடம்பெற்றது.
30 1950 கிருஷ்ண விஜயம் தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ் என். சி. வசந்தகோகிலம், பி. வி. நரசிம்ம பாரதி, சுந்தர் ராவ் நட்கர்ணி எஸ். எம். சுப்பையா நாயுடு, சி. ஆர். சுப்பராமன் 14 சூன் 1950 இத்திரைப்படத்தில் லலிதா, பத்மினி ஆகியோரின் நடனக் காட்சி இடம்பெற்றது.
31 1950 விஜயகுமாரி தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ் கே. ஆர். இராமசாமி, டி. ஆர். இராஜகுமாரி, செருகுளத்தூர் சாமா, டி. எஸ். பாலையா, குமாரி கமலா, பி. கே. சரஸ்வதி, மா. நா. நம்பியார் ஏ. எஸ். ஏ. சாமி சி. ஆர். சுப்புராமன் 18 மார்ச் 1950
32 1951 மர்மயோகி தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ் ம. கோ. இராமச்சந்திரன், அஞ்சலிதேவி, மாதுரி தேவி , மா. நா. நம்பியார் கே. இராம்நாத் எஸ். எம். சுப்பையா நாயுடு, சி. ஆர். சுப்பராமன் 02 பெப்ரவரி 1951. எம். ஜி. இராமச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடித்தார். மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து "A" (வயது வந்தவர்களுக்கு மட்டும்) சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் படம். ஜூபிடர் பிக்சர்ஸ் பின்னர் தெலுங்கு மர்மயோகி திரைப்படத்தில் என். டி. ராமராவ் நடித்தார்
33 1951 சுதர்சன் தமிழ் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் + வாகினி ஸ்டுடியோஸ் (ராயல் டாக்கீஸ்) பு. உ. சின்னப்பா, பி. கண்ணாம்பா, (யோகம்) மங்கலம், லலிதா, டி. எஸ். பாலையா, டி. பாலசுப்பிரமணியம் , பி. பி. ரங்காச்சாரி, சி. கே. சரஸ்வதி ஏ. எஸ். ஏ. சாமி, சுந்தர் ராவ் நட்கர்ணி ஜி. இராமநாதன் 28 நவம்பர் 1951. படத்தின் கதாநாயகனான பு. உ. சின்னப்பா படம் வெளியாவதற்கு முன்பே இறந்துவிட்டார்.
34 1951 கைதி தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ் எஸ். பாலச்சந்தர், எஸ். ஏ. நடராஜன், எஸ். ரேவதி, எஸ். மீனாட்சி, கே. மாலதி எஸ். பாலச்சந்தர் எஸ். பாலச்சந்தர் 23 திசம்பர் 1951
35 1952 ராணி தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ் எஸ். பாலசந்தர், பி. பானுமதி எல். வி. பிரசாத் சி. ஆர். சுப்பராமன், டி. சி. தத் 26 ஏப்ரல் 1952 செண்ரல் + நெப்டியூன்
36 1952 ராணி இந்தி ஜுபிடர் பிக்சர்ஸ் அனூப் குமார், பி. பானுமதி எல். வி. பிரசாத் சி. ஆர். சுப்பராமன், டி. சி. தத் 26 ஏப்ரல் 1952 செண்ரல் + நெப்டியூன்
37 1952 புயல் தமிழ் பெலிகன் பிக்சர்ஸ் (கே. பி. ஜார்ஜ்) ஜி. எம். பஷீர், எம். வி. ராஜம்மா, ஜி. எம். குல்சார், கே. ஆர். ராம்சிங் ஜி. விஸ்வநாத் எஸ். ஜி. கே. பிள்ளை, பி. எஸ். திவாகர் 25 சூலை 1952
38 1952 ஜமீந்தார் தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ் + சங்கீதா பிக்சர்ஸ் (செண்டரல்) எஸ். ஏ. நடராஜன். மாதுரி தேவி , எம். வி. ராஜம்மா, டி. பாலசுப்பிரமணியம், டி. பி. முத்துலட்சுமி பி. வி. கிருஷ்ணன் ஜி. ராமநாதன் 30 ஆகத்து 1952
39 1953 நால்வர் தமிழ் எம். ஏ. வேணு (சங்கீதா பிக்சர்ஸ்) ஏ. பி. நாகராசன், குமாரி தங்கம், என். என். கண்ணப்பா, எம். என். கிருஷ்ணன், முத்துலட்சுமி வி. கிருஷ்ணன் கே. வி. மகாதேவன் 05 நவம்பர் 1953
40 1954 மாங்கல்யம் தமிழ் எம். ஏ. வேணு (எம். ஏ. வி பிக்சர்ஸ்) ஏ. பி. நாகராசன், ராஜசுலோசனா, எஸ். ஏ. நடராஜன், பி. எஸ். சரோஜா, ஏ. கருணாநிதி, எஸ். மோகனா, மா. நா. நம்பியார், சி. டி. ராஜகாந்தம், எம். எம். ஏ. சின்னப்ப தேவர் கே. சோமு கே. வி. மகாதேவன் 22 மே 1954 இப்படத்தில் ராஜசுலோசனா அறிமுகமானார்
41 1954 சொர்க்க வாசல் தமிழ் ஜுபிடர் பிக்சர்ஸ் + பரிமளம் பிக்சர்ஸ் கே. ஆர். ராமசாமி, எஸ். எஸ். ராஜேந்திரன், அஞ்சலிதேவி, பி. எஸ். வீரப்பா, பத்மினி ஏ. காசிலிங்கம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 28 மே 1954 படத்தின் ஒரு பகுதி சென்ட்ரல் ஸ்டுடியோஸ் மற்றும் சென்னை அடையார் நெப்டியூன் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. கா. ந. அண்ணாதுரை முதன்முறையாக திரைக்கதை மற்றும் வசனங்களுக்கு அறிஞர் அண்ணா என புகழ் பெற்றார்.
42 1954 மனசாட்சி மலையாளம் கே. எஸ். அகிலேஸ்வரய்யர் (ஈஸ்வர் புரோடக்சன்ஸ்) "பிரேம் நசீர், பி. பாஸ்கரன், கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், ஹேமலதா, டி. ஆர். ஓமனா, ஜோஸ் பிரகாஷ், பி. ஏ. தாமஸ் G. Viswanath S. G. K. Pillai 20 ஆகத்து 1954 அம்மையே காணான் (1963) படத்தின் கதை இந்தப் படத்தைப் போலவே இருந்தது.
43 1955 நல்ல தங்கை தமிழ் எஸ். ஏ. நடராஜன்- ஃபார்வர்டு ஆர்ட் பிலிம்ஸ் மா. நா. நம்பியார், மாதுரி தேவி, ராஜசுலோசனா, எஸ். ஏ. நடராஜன் டி. எஸ். பாலையா எஸ். ஏ. நடராஜன் ஷி. இராமநாதா 5 பெப்ரவரி 1955 நல்ல தங்காள் என்ற தலைப்பில் மற்றொரு படம் மெட்ராஸ் மூவிடோன்ஸ் தயாரித்து அந்த ஆண்டு இறுதியில் வேறு நடிகர்கள் மற்றும் குழுவினருடன் வெளியிடப்பட்டது.
44 1955 முல்லைவனம் தமிழ் அரவிந்த் பிக்சர்ஸ் (வி. கிருஷ்ணன்) சிறிராம், குமாரி ருக்மணி, பி. எஸ். வீரப்பா, ஏ. கருணாநிதி வி. கிருஷ்ணன் கே. வி. மகாதேவன் 11 மார்ச் 1955
45 1955 பெண்ணரசி தமிழ் எம். ஏ. வேணு (எம். ஏ. வி பிக்சர்ஸ்) ஏ. பி. நாகராசன், ப. கண்ணாம்பா, ராஜசுலோசனா, மா. நா. நம்பியார், பி. எஸ். வீரப்பா கே. சோமு கே. வி. மகாதேவன் 07 ஏப்ரல் 1955 கதை ஏ. பி. நாகராசன்
46 1955 ஆசை அண்ணா அருமை தம்பி தமிழ் சிறீநிதி பக்சர்ஸ் (மாதுரி தேவி ) ஏ. பி. நாகராசன், மாதுரி தேவி , டி. ஆர். இராமச்சந்திரன் , வி. எம். ஏழுமலை, ராஜசுலோசனா ஜி. ஆர். ராவ் கே. வி. மகாதேவன் 29 சூன் 1955 நியூடோன் & பிலிம் செண்டர்
47 1955 டவுன் பஸ் தமிழ் எம். ஏ. வேணு (எம். ஏ. வி பிக்சர்ஸ்) என். என். கண்ணப்பா, அஞ்சலிதேவி, ஏ. கருணாநிதி, எம். என். ராஜம் கே. சோமு கே. வி. மகாதேவன் 13 நவம்பர் 1955 கதை ஏ. பி. நாகராசன்
  • 1947 ஆம் ஆண்டு சிங்களத் திரைப்படமான அசோகமலாவும் சென்ட்ரல் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது [11]
  • 1954 ஆம் ஆண்டு பிரேம் நசீரின் வெற்றித் திரைப்படமான மானசாட்சி இங்கு தயாரிக்கப்பட்டது.[12]

மேலும் பார்க்கவும்

தொகு
  1. "CENTRAL STUDIOS AND TEXTILES PRIVATE LIM ITED - Company, directors and contact details". Zauba Corp. 2021-03-02. பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  2. "Commissioner Of Income-Tax vs Central Studios (P.) Ltd. on 16 August, 1972". indiankanoon.org. பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  3. Guy, Randor (29 January 2017). "Sathi Anusuya (1937)". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Sathi-Anusuya-1937/article17111613.ece. 
  4. Rao, Subha J. (17 July 2012). "In the limelight". The Hindu. https://www.thehindu.com/features/cinema/in-the-limelight/article3649311.ece. 
  5. "Kalaignar's tryst with cinema began in Coimbatore | Coimbatore News - Times of India". 9 August 2018. https://timesofindia.indiatimes.com/city/coimbatore/kalaignars-tryst-with-cinema-began-in-coimbatore/articleshow/65423106.cms. 
  6. "Celluloid stories". 20 March 2014. https://www.thehindu.com/features/cinema/celluloid-stories/article5810184.ece. 
  7. "Notes on an icon". 25 December 2013. https://www.thehindu.com/features/friday-review/music/notes-on-an-icon/article5500972.ece. 
  8. "Sorgavaasal 1954". 4 February 2010. https://www.thehindu.com/features/cinema/Sorgavaasal-1954/article15448137.ece. 
  9. "Sree Andal (1949)". 15 March 2014. https://www.thehindu.com/features/cinema/cinema-columns/sree-andal-1949/article5788442.ece. 
  10. "A scholar's pauper's death". 13 May 2012. https://www.thehindu.com/news/cities/chennai/chen-columns/a-scholars-paupers-death/article3412048.ece. 
  11. Muthiah, S. (14 May 2018). "Lester and Ceylon's films". The Hindu. https://www.thehindu.com/society/history-and-culture/lester-and-ceylons-films/article23879760.ece. 
  12. Vijayakumar, B. (16 February 2014). "OLD IS GOLD: MANASAKSHI 1954". The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/old-is-gold-manasakshi-1954/article5693417.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்ட்ரல்_ஸ்டுடியோஸ்&oldid=4167153" இலிருந்து மீள்விக்கப்பட்டது