ஆர்யமாலா

1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆர்யமாலா (Aryamala) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். சந்தானலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] ஆரியமாலா திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சின்னப்பாவை ஒரு பெரும் திரைப்பட நாயகனாக்கியது. இதே நாட்டுப்புறப் புராணக்கதை 1958-இல் காத்தவராயன் என்ற தலைப்பில் மீண்டும் தயாரிக்கப்பட்டது.

ஆர்யமாலா
இயக்கம்பொம்மன் இரானி
தயாரிப்புகே. எசு. நாராயணன் ஐயங்கார்
எசு. எம். சிறீராமுலு நாயுடு
கோவை சென்ட்ரல் ஸ்டூடியோ
கதைடி. சி. வடிவேலு நாயக்கர்
இசைஜி. ராமநாதன்
நடிப்புபு. உ. சின்னப்பா
எம். எஸ். சரோஜினி
ஒளிப்பதிவுருசுத்தம் எம். இரானி
படத்தொகுப்புஎஸ். சூரியா
கலையகம்பட்சிராஜா பிலிம்சு
விநியோகம்நாராயணன் & கம்பனி
வெளியீடுஅக்டோபர் 19, 1941 (1941-10-19)
ஓட்டம்218 நிமி.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை

தொகு

வேட்டையாடுபவர்களால் வளர்க்கப்பட்ட காத்தவராயன் என்ற மூன்றாவது மகனை சிவபெருமான் உருவாக்குகிறார் என்பது ஒரு நாட்டுப்புற புராணம். காத்தவராயன் இளங்கன்னி என்ற வானளாவிய பெண்ணைக் காதலிக்கிறான். காத்தவராயன் அவளைக் காதலிக்க முயலும்போது, அவள் நீரில் மூழ்கிவிடுகிறாள். ஆனால் அவள் மீண்டும் ஆர்யமாலா என்ற பெயரில் இளவரசியாகப் பிறந்தாள். காத்தவராயன் ஆர்யமாலாவைக் காதலிக்கிறான். அவன் தனது வடிவத்தை உயிரினங்களாக மாற்றப் பல தந்திரங்களை முயற்சிக்கிறார். ஒருமுறை அவன் கிளியாக மாறி அவள் அரண்மனைக்குச் செல்கிறான். அவள் கிளியை விரும்புகிறாள். ஆனால் அவன் தனது வழக்கமான வடிவத்தை எடுத்து, அவள் தூங்கும் போது ஆர்யமாலாவுக்கு முடிச்சு போடுகிறான். அதிர்ச்சியடைந்த ஆர்யமாலா, மீண்டும் நீரில் மூழ்க முயன்றாள். ஆனால் விட்டுணு அவளைக் காத்தருள்கிறார். காத்தவராயன் அரசனால் சிறையில் அடைக்கப்பட்டான். இருப்பினும், விட்டுணு தலையிட்டு எல்லாவற்றையும் சுமுகமாகத் தீர்த்து வைக்கிறார். காத்தவராயனும் ஆர்யமாலாவும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.[1]

பாத்திரங்கள்

தொகு

பின்வரும் பட்டியல் திரைப்படத் தலைப்பில் இருந்தும், பாட்டுப் புத்தகத்தில் இருந்தும் எடுக்கப்பட்டது.[2]

நடிகர்கள்
 • பு. உ. சின்னப்பா - காத்தவராயன்
 • டி. எஸ். பாலையா - பாலராயன்
 • என். எஸ். கிருஷ்ணன் - சின்னான்
 • வாசுதேவ ராவ் பி.ஏ., பி.எல். - ஆரியப்பூராசன்
 • எஸ். கிருஷ்ண சாத்திரி - அப்பா பட்டர்
 • வி. வி. எஸ். மணி - சிறீ கிருஷ்ணன்
 • பி. ராஜகோபால ஐயர் - பரமசிவன்
 • கொளத்துமணி - மன்னாரு (வண்ணான்)
 • கே. ஆர். நாகராஜ ஐயர் - சோமேச ஆரியன்
 • என். தியாகராஜன் பி.ஏ. - வேடுவ அரசன்
 • சிவன் - பிச்சைக்காரப் பையன்

நடிகைகள்

பாடல்கள்

தொகு

சி. இலட்சுமணதாஸ் இயற்றிய பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் RCA Photophone இல் பதிவு செய்யப்பட்டது. பின்வரும் பட்டியல் ஆர்யமாலா பாட்டுப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[2]

எண். பாடல் பாடகர்(கள்) இராகம்/தாளம்
1 "ஜெயதேவா சேவை ஆவல் ஆனோம்" குழுவினர்-சப்த கன்னிகைகள்
2 "யாவும் சிவன் செயலென்றே" பிச்சைக்காரப் பையன்
3 "மாமலர்ச் சோலை இதே விவ்ய"" எம். ஆர். சந்தானலட்சுமி கரகரப்பிரியா/ஆதி
4 "மானினியே மையல் ஆனேன்" பு. உ. சின்னப்பா குந்தவராளி/ஆதி
5 "ஆதார தேவனே அருள்பரனே" எம். ஆர். சந்தானலட்சுமி ஜகன்மோகினி/ஆதி
6 "தாவள்ய ரூபனே தாலேதாலோ" எம். ஆர். சந்தானலட்சுமி
7 "தெய்வமே ஒன்றுதான் செய்வதும் நன்றுதான்" வேடர்கள் (நடனம்)
8 "சகிமாரே வருவீர்" எம். எஸ். சரோஜா
9 "சிவக்ருபையால் புவிமேல் மாதாவுனை" பு. உ. சின்னப்பா
10 "ஆரவல்லியே நீயும் வீணா அதைர்யப்படலாமோ" என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம்
11 "பாக்ய சிலாக்கிய பரவசமே ஆனேன்" எம். எஸ். சரோஜா மாண்டு/ஆதி
12 "ஆயிமகமாயி அவ ஆயிரங் கண்ணுடையா" டி. ஏ. மதுரம்
13 "சிறீமதியே உனைநான் கண்டாவல் கொண்டதினால்" பு. உ. சின்னப்பா
14 "என் மனமே புண்படுதென் செய்வேன்" எம். எஸ். சரோஜா சாவேரி/ஆதி
15 "தேஜசையே சொல்வேன் மானே அவன்" எம். எஸ். சரோஜா செஞ்சுருட்டி/ஆதி
16 "அழகே உருவான பொண்ணு உம்மேலே" என். எஸ். கிருஷ்ணன், பு. உ. சின்னப்பா
17 "ஒரு ஏகாலியைப் போலே" பு. உ. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன்
18 "காட்டுக்குள்லே கண்ணி போட்டு" என். எஸ். கிருஷ்ணன்
19 "எந்தன் சிந்தைக்கின்பமே தரும்" எம். எஸ். சரோஜா, பு. உ. சின்னப்பா புன்னகவராளி, சாமா, தேசிகதோடி/ஆதி
20 "வளையல் நல்ல வளையல் மலிவாகவே தருவேன்" பு. உ. சின்னப்பா
21 "மாதவனே கண்ணா மாயா தூயா" எம். எஸ். சரோஜா செஞ்சுருட்டி/ஏகம்
22 "மாதவ மக தேவா" எம். ஆர். சந்தானலட்சுமி விஜயநாகிரி/ஆதி

வெளியீடு

தொகு

ஆரியமாலா 1941 அக்டோபர் 19 அன்று சென்னை நாராயணன் & கம்பனியினால் வெளியிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
 1. 1.0 1.1 ராண்டார் கை (22 சூலை 2010). "Aryamala (1941)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/aryamala-1941/article528363.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2016. 
 2. 2.0 2.1 Ariyamala (song book). Pakshiraja Films. 1941.
 3. "Aryamala". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 19 October 1941. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19411019&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்யமாலா&oldid=3817239" இலிருந்து மீள்விக்கப்பட்டது