பூலோக ரம்பை

தா. யோகானந்த் இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பூலோக ரம்பை (Boologa Rambai) என்பது 1958ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் டி.யோகானந்த் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அசோகா பிச்சர்சு என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. அரு. ராமநாதன் மற்றும் விரிதை நா. இராமசாமி ஆகியோர் இத்திரைப்பட வசனங்களை எழுதியுள்ளனர். கே. ராம்நாத் திரைக்கதையை எழுதியுள்ளார். சி. என். பாண்டுரங்கன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி, பி. எஸ். வீரப்பா, மா. நா. நம்பியார் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜசுலோசனா, கே. ஏ. தங்கவேலு, ஏ. கருணாநிதி ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[2][3]

Boologa Rambai
பூலோக ரம்பை
இயக்கம்டி. யோகானந்த்
கதைஅரு.ராமநாதன்
விரிதாய் நா.ராமசாமி
திரைக்கதைகே.ராம்நாத்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புஜெமினி கணேசன்
அஞ்சலி தேவி
பி. எஸ். வீரப்பா
எம். என். நம்பியார்
ராஜசுலோச்சனா
ஒளிப்பதிவுஜெ. ஜி. விஜயம்
படத்தொகுப்புபி.ஜி.மோகன்
வெளியீடு14 ஜனவர் 1958[1]
ஓட்டம்168 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

குழுவினர்

தொகு
  • தயாரிப்பாளர் டி. யோகானந்த்
  • கலை: மகாதேவன் பிள்ளை மற்றும் சோமையா
  • நிழற்படம்: ஆர்.வெங்கடாச்சாரி
  • செயலாக்கம்:ஆர்.கிருசுணன் மற்றும் எஸ்.வி. வெங்கடரமணன்
  • கேட்பலை வரைவு: வி. எஸ். ராகவன், என். ராமசந்திரன்,கிருட்டிணையர், டி. எஸ். ரங்கசாமி மற்றும் கோவிந்தசாமி
  • கேட்பலை வரைவு (உரையாடல்): ஆர். எஸ். ராசன்
  • நடனம்: மகாதேவன், வி. பி. பலராம், சோகன்லால், மற்றும் பசுமர்த்தி கிருட்டிணமூர்த்தி

ஒலிப்பதிவு

தொகு
பூலோக ரம்பை
ஒலிப்பதிவு
சி.என்.பாண்டுரங்கன்
வெளியீடு1958
ஒலிப்பதிவு1958
இசைப் பாணிசரீகம
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்சி. என். பாண்டுரங்கன்

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-21. பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.
  2. "boologa rambai". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2016-02-16.
  3. http://tamilrasigan.com/boologa-rambai-1958-tamil-movies-online-watch-free/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலோக_ரம்பை&oldid=3949813" இலிருந்து மீள்விக்கப்பட்டது