முதன்மை பட்டியைத் திறக்கவும்

சுந்தரம் கரிவரதன் அல்லது சுருக்கமாக கரி (சூன் 20, 1954 கோயம்புத்தூர், இந்தியா–ஆகத்து 24, 1995 )இந்தியாவின் தானுந்து விளையாட்டுகளில் நீங்கா இடம் பெற்றவர் ஆகும். ஓர் சிறந்த ஃபார்முலா ஒன்று ஓட்டுனராக இருந்தது மட்டுமன்றி பல ஃபார்முலா தானுந்திகளை வடிவமைப்பதிலும் தயாரிப்பதிலும் பெயர் பெற்றார். இவர் வடிவமைத்த திறந்தவெளி சக்கரங்களுடன் கூடிய மாருதி ஃபார்முலா பந்தய தானுந்தி குறிப்பிடத்தக்கது. இவரது மற்ற குறைந்தவிலை பந்தயக்கார்கள் பிற போட்டியாளர்களுக்கு உதவியாக இருந்தது. நாராயண் கார்த்திகேயன், கருண் சந்தோக், அர்மான் எப்ராகிம் போன்றோர் தானுந்து விளையாட்டுகளில் பங்கேற்க முதன்மைக் காரணமாக இருந்தார். தமது 41ஆம் அகவையில் பயிற்சி வானூர்தி ஓட்டுகையில் விபத்து நிகழ்ந்து மரணமடைந்தார்.[1]

இளமைதொகு

கரிவரதன் கோவையின் முன்னணி தொழிலதிபரும் இலட்சுமி மில் குழும குடும்பத்தினருமாகிய ஜி. கே. சுந்தரத்திற்கு சூன் 20,1954 அன்று பிறந்தார். கோவையில் பள்ளிப்படிப்பை முடித்து பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார். முதுகலைப் பட்டத்தை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

தானுந்து பந்தயங்கள்தொகு

வானூர்தி பறத்தல் ஆர்வம்தொகு

இயக்கவியல் மற்றும் விமான போக்குவரத்து துறையில் ஆர்வம் கொண்டிருந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அவர்களுக்கென்று ஒரு சொந்த செஸ்னா விமானம் வைத்திருந்தனர்.

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

மூலங்களும் இணைப்புகளும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரம்_கரிவரதன்&oldid=2764193" இருந்து மீள்விக்கப்பட்டது