ஜி. கே. சுந்தரம்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
ஜி. கே. சுந்தரம் (G.K. Sundaram, 1914–2009) கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். 1930 இல் இராஜாஜி தலைமையிலான வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், தனது 16 ஆம் வயதில் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றவர்.
வாழ்க்கையும் கல்வியும்
தொகுகோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் பிறந்தவர். பெற்றோர் ஜி. குப்புசாமி நயுடு, லட்சுமி அம்மாள். கோவையில் உள்ள சர்வஜன மேல்நிலைப் பள்ளியிலும், யூனியன் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பைப் பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர் மீடியேட் வகுப்பு பயின்றார். இங்கிலாந்தின் போல்டனில் உள்ள காலேஜ் ஆப் டெக்னாலஜியில் நூற்பு பொறியியல் படித்தார்.[1] இந்தியாவின் தானுந்து விளையாட்டுகளில் நீங்கா இடம் பெற்றவரான சுந்தரம் கரிவரதன் இவரது மகனாவார்.
விருதுகள்
தொகு- கம்பன் புகழ் விருது, 2001 வழங்கியது: கொழும்பு கம்பன் கழகம், இலங்கை
வகித்த பதவிகள்
தொகு- லட்சுமி ஆலைகள், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்
- சுதந்திரா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் (1968–1974)
- தென்னிந்தியப் பஞ்சாலைகள் சங்கத் தலைவர் (SIMA) (1967 - 1969)
- பாரதிய வித்தியா பவன், கோவை மண்டலத் தலைவர். (20 ஆண்டுகள்)
- தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகத் தலைவர் (10 ஆண்டுகள்)[2]
மறைவு
தொகுஜி. கே. சுந்தரம் தமது 95வது அகவையில் உடல்நலக் குறைவால் 18 மே 2009ல் மறைந்தார்.[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "G K Sundaram". Archived from the original on 2019-06-21. பார்க்கப்பட்ட நாள் 2019-06-21.
- ↑ தினமணி தீபாவளி மலர், 1999, தலைசிறந்த தமிழர்கள். பக்கம்128
- ↑ G.K. Sundaram, doyen of textile industry, passes away, தி இந்து, நாள்:மே 19, 2009
- ↑ "G K Sundaram is no more". Archived from the original on 2013-10-03. பார்க்கப்பட்ட நாள் 2019-06-21.