பட்டகப்பட்டி

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

பட்டகப்பட்டி (Pattagapatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

பட்டகப்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது கிருஷ்ணகிரி- போச்சம்பள்ளிச் சாலையில் உள்ளது. இந்த ஊர் கிருஷ்ணகிரியில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், சந்தூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. வரட்டனப்பள்ளியில் இருந்தும் பட்டகப்பட்டிக்கு செல்லபாதை உள்ளது.

பெருங்கற்காலச் சின்னங்கள்

தொகு

இந்த ஊரில் இருந்து சந்தூர் செல்லும் சாலையி்ன் இரு புறங்களிலும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் நிறைந்துள்ளன. இங்கு காணப்படும் ஈமச்சின்னங்கள் கல் வட்டம், கல்திட்டை வகையைச் சேர்ந்தவை.[1]

பட்டகபட்டியில் உள்ள கல்திட்டைகள் உயரம் குறந்தவையாக உள்ளன. கரடுமுரடான நான்கு கற்பலகைகள் ஒன்றோரு ஒன்று மிக நெருக்கமாக நிறுத்திவைக்கபட்டுள்ளன. இந்த கல்திட்டைகளின் கற்பலகைகள் பாதி பூமியில் புதைந்து உள்ளன. தரை மட்டத்திற்கு மேலே பாதி மட்டும் தெரிகின்றன. இந்த கல்திட்டைகளில் U வடிவ இடுதுளைது இடப்பட்டுள்ளது. இடுதுளையானது ஒரு ஆள் நுழையும் அளவு பெரியதாக அமைக்கபட்டுள்ளது. [1]

இங்கு பல அளவுகளில் நூற்றுக்கு மேற்பட்ட கல்வட்டங்கள் உள்ளன. இதில் பெரிய அளவு கல்வட்டங்கள் 37 அடி முதல் 46 அடிவரை விட்டம் கொண்டுள்ளன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். pp. 128–129. {{cite book}}: Check date values in: |year= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டகப்பட்டி&oldid=3753115" இலிருந்து மீள்விக்கப்பட்டது