பட்டாரிக்கா கோயில்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கோயில்

பட்டாரிக்கா கோயில் (Bhattarika Temple) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கட்டாக் நகரில் அமைந்துள்ளது. மகாநதி ஆற்றின் கரையில் பரம்பா வட்டத்திலுள்ள சசாங்கா கிராமத்தில் இக்கோயில் உள்ளது. சக்தியின் வெளிப்பாடாக வணங்கப்படும் இந்து தேவி பட்டாரிக்காவுக்காக இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புராண இதிகாச மரபில், கார்த்தவீரிய அருச்சுனனிடம் தோல்வியை எதிர்கொண்ட பரசுராமர் இந்த இடத்தில் தோன்றிய துர்காவிடம் தெய்வீக சக்தியை தனக்கு கொடுத்துதவுமாறு பிரார்த்தனை செய்தார் எனக் கூறப்படுகிறது. பான சங்கராந்தி புத்தாண்டு திருவிழா ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்திலும், அட்சய திருதியை புனிதநாள் மே மாதத்திலும், அக்டோபர் மாதத்தில் தசரா திருவிழாவும் இங்கு கொண்டாடப்படுகின்றன.[1][2][3]

பட்டாரிக்கா கோயில்
Bhattarika Temple
பட்டாரிக்கா கோயில்
பட்டாரிக்கா கோயில் is located in ஒடிசா
பட்டாரிக்கா கோயில்
ஒரிசாவில் பட்டாரிக்கா கோயில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஒடிசா
மாவட்டம்:கட்டக்
அமைவு:பரம்பா தாலுகா, சசாங்கா கிராமம்
ஆள்கூறுகள்:20°22′6.71″N 85°16′18.16″E / 20.3685306°N 85.2717111°E / 20.3685306; 85.2717111
கோயில் தகவல்கள்

அன்னை துர்கையை ஆராதிக்கும் துர்கா பூசை திருவிழா வெகுவிமரிசையாக இங்கு ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Bhattarika temple". Archived from the original on 2 April 2009. பார்க்கப்பட்ட நாள் 9 February 2009.
  2. "Bhattarika Temple". Destinations of Orissa. Bright Odisha. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
  3. 3.0 3.1 "Mahamaya Bhattarika Temple, Sasang" (PDF). Indira Gandhi National Centre For The Arts. www.ignca.gov.in/. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாரிக்கா_கோயில்&oldid=3079059" இலிருந்து மீள்விக்கப்பட்டது