பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில்

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே 47 கிமீ தொலைவில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ளது. அருகில் பட்டுக்கோட்டை கோட்டை சிவன் கோயில் உள்ளது.

மூலவர் தொகு

இக்கோயிலில் மூலவராக நாடியம்மன் உள்ளார். மூன்று குதிரைகள் காவலுக்கு நிற்கின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக சிம்மன் உள்ளது. ராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது. திருவிழாக் காலத்தில் பதுமைகள் பூச்சொரியும் நிகழ்ச்சி இங்கு சிறப்பாக நடைபெறும். [1]

வரலாறு தொகு

மன்னர் சரபோசி வேட்டையாட வந்தபோது ஒரு பெண்ணைக் கண்டதாகவும், அவரைத் தொடர்ந்து சென்றபோது அப்பெண் ஒரு புதரில் மாயமாக மறைய அங்கு இரண்டரையடி உயரத்தில் கற்சிலையைக் கண்டதாகவும், கோட்டை சிவன் கோயில் குருமார்களை அழைத்து அங்கேயே அம்மனுக்கு ஒரு கோயில் அமைத்ததாகக் கூறுவர். [1]

குடமுழுக்கு தொகு

இக்கோயிலின் குடமுழுக்கு, 21 ஆண்டுகளுக்குப் பின், 27 சனவரி 2022இல் நடைபெற்றது. [2] [3]

மேற்கோள்கள் தொகு