பட்டுக்கோட்டை விஸ்வநாதன்
பட்டுக்கோட்டை விஸ்வநாதன் அவர்கள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் பன்னைவயல், என்னும் ஊரில் பிறந்தார். ம.தி.மு.க தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்த அவர்,வைகோ அவர்களின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கினர்.பட்டுக்கோட்டை நகரசபைக்கு இரண்டு முறை தலைவராக பொறுப்பேற்ற இவர், பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். ஒருமுறை இவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் இவரின் துணைவியார் ஜெயபாரதி விஸ்வநாதனை நிற்கவைத்து நகரசபை தலைவராக வெற்றிபெறவைத்தார்.
மதிமுக பிரிவிற்குமுன் திமுகவின் முக்கியநபராக இருந்த இவர், இதனைத்தொடர்ந்து திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் இக்குற்றச்சாட்டு தள்ளிவைக்கப்பட்டது. மதிமுக, திமுகவில் இருந்து பிரிந்தபோது இவரும் மதிமுகவில் இணைந்தார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதிமுகவின் சார்பில் இவர் பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) யில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற்று தோல்வியடைந்தார். 16-07-2007 அன்று காலமானார்.