பண்டா இராச்சியம்
பண்டா இராச்சியம் (Banda state) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், புந்தேல்கண்ட் பகுதியில் 1790 முதல் 1858-ஆண்டு முடிய செயல்பட்ட ஒரு சுதேச சமஸ்தானம் ஆகும். பண்டா இராச்சியம் மராட்டியப் பேரரசுக்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்தது. இந்த இராச்சியத்தை நிறுவியவர் முதலாம் அலி பகதூர் (1790–1802) ஆவார். பிரித்தானிய இந்தியாவிற்கு எதிரான 1857-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாம் விடுதலைப் போராட்டத்தில் பண்டா இராச்சியமும் பங்கேற்றினர். மேலும் அவகாசியிலிக் கொள்கையின் படி இந்த இராச்சியம் 1858-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[1]
1881-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பண்டா இராச்சியத்தின் மக்கள் தொகை 6,98,608 ஆகும்.[2]
வரலாறு
தொகுமராத்தியப் பேரரசின் பேஷ்வா பாஜிராவ்-மஸ்தானிக்கு பிறந்த பேரனும், சாம்செர் பகதூரின் மகனுமான முதலாம் அலி பகதூர் 1790-ஆண்டில் பண்டா இராச்சியத்தை தன்னாட்சியுடன் நிறுவினார். இவரது வழித்தோன்றலான இரண்டாம் அலி பகதூர் ஆட்சியின் போது பாண்டா இராச்சியம் 1857-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாம் விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றியது. மேலும் அவகாசியிலிக் கொள்கையின் படி பாண்ட இராச்சியத்தை 1858-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்தனர்.
ஆட்சியாளர்கள்
தொகுஇந்தனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 David P. Henige (2004). Princely States of India: A Guide to Chronology and Rulers. Orchid Press. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-974-524-049-0.
- ↑ Hunter, William Wilson (9 November 1885). "The Imperial gazetteer of India" – via Internet Archive.