பண்டிட் நிரஞ்சன் பிரசாத்

பண்டிட் நிரஞ்சன் பிரசாத் (Pandit Niranjan Prasad) (11 நவம்பர் 1941 - 31 மார்ச் 2013) இந்தியாவின் அலகாபாத்தைச் சேர்ந்த புல்லாங்குழல் கலைஞராவார் . [1]

பண்டிட் நிரஞ்சன் பிரசாத்
பிறப்பு(1941-11-11)11 நவம்பர் 1941
அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்பு31 மார்ச்சு 2013(2013-03-31) (அகவை 71)
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)புல்லாங்குழல் இசைத்தல்
இசைக்கருவி(கள்)புல்லாங்குழல்
இசைத்துறையில்1941-2013

தொழில் தொகு

பிரசாத் வாரணாசி கரானாவைச் (பாரம்பரியம்) சேர்ந்தவர், புல்லாங்குழல் மற்றும் செனாய் கலைஞர் போலோநாத் பிரசன்னாவின் சீடர்களில் ஒருவராக இருந்தார். இந்தியா, அமெரிக்கா, ஆத்திரேலியா, ஐரோப்பா, ஈரான், ஈராக், குவைத், பாக்தாத், மத்திய கிழக்கில் பகுரைன் போன்ற நாடுகளில் உள்ள முக்கிய இசை விழாக்களிலும், மாநாடுகளிலும் இவர் நிகழ்த்தினார். அனைத்திந்திய வானொலியிலும், தூர்தர்ஷனிலும் தவறாமல் இடம்பெறுவார். இவர் கலாச்சார உறவுகளுக்கான இந்திய அமைப்பின் கலைஞராகவும் இருந்தார்.

1964 முதல் 1972 வரை திரைப்படங்களிலும் புல்லாங்குழல் வாசித்தார். குட்டி (1971) ஷோர், தர்கன், பிரேம் பர்வத் போன்ற பாலிவுட் திரைப்படங்களுக்கும் இவர் இசையமைத்திருந்தார். 1974 முதல் புதுதில்லியின் அனைத்திந்திய வானொலியுடன் தொடர்புடையவர். மேலும், 2001 இல் இலக்னோ, அனைத்திந்திய வானொலியிலிருந்து ஓய்வு பெற்றார். [2]

இறப்பு தொகு

31 மார்ச் 2013இல் இவர் காலமானார். 2014 ஆம் ஆண்டில் இவரது முதல் நினைவாண்டில், [3] இலக்னோவின் இசை நாடக் அகாதமியில் இவருக்கு ஒரு அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டது. இவரது "சாத்னா கே பூல்" என்ற இசை குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. இவரது இணை கலைஞர் பத்ம விபூசண் யாமினி கிருஷ்ணமூர்த்தி இந்த நிகழ்ச்சியில் தனது குழுவினருடன் ஒரு நடன நிகழ்ச்சியை நடத்தினார். எஸ். சௌரவ் பனவுதா, எஸ். இராசசேகர் தல்பேகெரா ஆகியோரின் புல்லாங்குழல் இசையும் இடம் பெற்றது.

மேற்கோள்கள் தொகு

  1. Prasad, Niranjan. "Bhola Nath and Niranjan Prasad on Flute". Raga Puriya Kalyan. Last FM.
  2. "Death anniv of Pandit Niranjan Prasad on Mar 31" Hindustan Times 26 Mar 201 "World-renowned flautist Pandit Niranjan Prasad would be remembered on his first death anniversary in the state capital on March 31"
  3. "Niranjan Smriti, 2014, Lucknow". Archived from the original on 2016-04-07. பார்க்கப்பட்ட நாள் 2021-02-05.

வெளி இணைப்புகள் தொகு