பண்டுவசுனுவர அருங்காட்சியகம்

பண்டுவசுனுவர தொல்பொருள் அருங்காட்சியகம் (Panduwasnuwara Museum) என்பது இலங்கையின் பண்டுவசுனுவரவில் உள்ள தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். இது குருணாகல் - சிலாபம் வீதியில் கொட்டம்பிட்டிய சந்தியில், புராதன விகாரையான பண்டுவசுனுவர ராஜ மகா விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் நாட்டின் வடமேற்கு மாகாணத்திற்கான பிராந்திய அருங்காட்சியகமாகச் செயல்படுகிறது.[1] இது இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தால் பராமரிக்கப்படுகிறது.

பண்டுவசுனுவர அருங்காட்சியகம்
Panduwasnuwara Museum
தொல்பொருள் அருங்காட்சியகம், பண்டுவசுனுவர
Map
நிறுவப்பட்டது1970களில்
அமைவிடம்பண்டுவசுனுவர , இலங்கை
ஆள்கூற்று7°36′18.6″N 80°06′05.4″E / 7.605167°N 80.101500°E / 7.605167; 80.101500
வகைதொல்லியல்
வலைத்தளம்http://www.archaeology.gov.lk

இந்த அருங்காட்சியகம், அகழ்வாராய்ச்சிகள், நன்கொடைகள், நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் பெறப்பட்ட தொல்பொருள்கள் மற்றும் குருநாகல் மாகாண சபை அருங்காட்சியகத்திலிருந்து பெறப்பட்ட தொல்பொருட்களின் தொகுப்பைக் காட்சிப்படுத்தப் பயன்படுகிறது. கலைப் பொருட்களில் சிறிய சிலைகள், கற்கள், உலோகங்கள், சுடுமண் பொருட்கள், மரக் கண்டுபிடிப்புகள், நாணயங்கள், மட்பாண்டங்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றைக் காணலாம்.[2][3]

வரலாறு தொகு

இந்த அருங்காட்சியகம் 1970களில் நிறுவப்பட்டது. 1977ஆம் ஆண்டில் பொறுப்பதிகாரியின் குடியிருப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது அருங்காட்சியகம் தொல்பொருள் துறையால் கையகப்படுத்தப்பட்ட பழைய கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது.[1]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Panduwasnuwara Museum (Regional)". archaeology.gov.lk. பார்க்கப்பட்ட நாள் 20 September 2016.
  2. "Panduwasnuwara Museum". srisalike.com. பார்க்கப்பட்ட நாள் 20 September 2016.
  3. "Archaeological Museum at Panduwasnuwara". www.lanka.com. பார்க்கப்பட்ட நாள் 20 September 2016.