பண்டைய சயாம்

பண்டைய சயாம் (ஆங்கிலம்: Ancient Siam அல்லது Mueang Boran); தாய்: เมืองโบราณ) என்பது தாய்லாந்து, பாங்பூ (Bangpoo), சமுத் பிரகான் (Samut Prakan); எனும் இடத்தில் அமைந்துள்ள திறந்தவெளி அருங்காட்சியகப் பூங்காவாகும். இது லெக் விரியாபந்த் (Lek Praphai Viriyahphant) என்பவரால் கட்டப்பட்டது; மற்றும் தாய்லாந்தின் வடிவத்தில் 200 ஏக்கர்கள் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.

பண்டைய சயாம்
Ancient Siam
เมืองโบราณ
பூங்கா நுழைவு வாயில்
Map
நிறுவப்பட்டது11 பெப்ரவரி 1972 (1972-02-11)
அமைவிடம்பேங்பூ, சமுத் பிரகான், தாய்லாந்து
ஆள்கூற்று13°32′21.498″N 100°37′22.515″E / 13.53930500°N 100.62292083°E / 13.53930500; 100.62292083
வகைவரலாற்று அருங்காட்சியகம்
நிறுவியவர்Lek and Praphai Viriyahphant
வலைத்தளம்www.muangboranmuseum.com

பண்டைய சயாம் உலகின் மிகப்பெரிய வெளிப்புற அருங்காட்சியகம் என்று அழைக்கப் படுகிறது. சாமுத் பிரகான் மாநிலத்தில் (Samut Prakan Province) உள்ள முதலைப் பண்ணைக்கு அருகில், 320 ஹெக்டேர் நகரம் தாய்லாந்தின் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்கள் மற்றும் கட்டடக்கலை ஈர்ப்புகளின் 116 கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.

பொது

தொகு
 
அறிவொளி மாளிகை

பண்டைய சியாமின் அடிப்படைகள் ஏறக்குறைய தாய்லாந்து னாட்டின் வரைப்பட வடிவத்துடன் ஒத்திருக்கின்றன, நினைவுச் சின்னங்கள் அவற்றின் சரியான இடங்களில் புவியியல் ரீதியாக அமைந்துள்ளன. சில கட்டிடங்கள் ஏற்கனவே உள்ள அல்லது முந்தைய தளங்களின் வாழ்க்கை அளவிலான பிரதிகளாக இருக்கின்றன; மற்றவை அளவிடப்பட்டுள்ளன.

வரலாற்றுத் துல்லியத்தை உறுதி செய்வதற்காகத் தேசிய அருங்காட்சியகத்தின் நிபுணர்களின் உதவியுடன் பிரதிகள் கட்டப்பட்டன.

கலைப் படைப்புகள்

தொகு

வரலாறு

தொகு

லெக் விரியாபந்த் சிறுவயதில் இருந்தே கலையில் ஆர்வம் கொண்டிருந்தார். அதுவே அவரைப் பண்டைய நகரத்தை நிறுவத் தூண்டியது. ஆரம்பத்தில், ஒரு தாய்லாந்து வரைப்பட வடிவிலான குழிப்பந்தாட்ட மைதானத்தை உருவாக்க விரும்பினார்.

அங்கு முக்கியமான தேசிய பண்டைய தளங்களின் மாதிரி படைப்புகள் வைக்கப்பட்டன. இது சுற்றுலா மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டது.

திறந்தவெளி அருங்காட்சியகம்

தொகு

பண்டைய நகரத்தை நிறுவுவது குறித்து லெக் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். பல பழங்காலத் தளங்கள் சிதைந்து கிடப்பதை அவர் கண்டறிந்தார். ஆகவே, பண்டைய நகரத்தின் கருத்தை ஒரு சுற்றுலா ஈர்ப்பாகவும், நிதானமாகவும் இருந்து கல்வி நோக்கத்திற்காக திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றினார்.

புதிய தலைமுறையினருக்கு அவர்களின் தேசிய பாரம்பரியத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளும் வகையில் இதை அமைக்க எண்ணினார்.

லெக் பண்டைய நகரத்திலும், பட்டாயாவில் உள்ள துரூத் சரணாலயத்திலும் (Sanctuary of Truth), சமுத் பிரகானில் உள்ள எராவன் அருங்காட்சியகத்திலும் (Erawan Museum) தொடர்ந்து கலைப் படைப்புகளை உருவாக்கினார். நவம்பர் 17, 2000; தன் வாழ்நாளின் இறுதி வரை சேவைப் பணிகளில் ஈடுபட்டார்.

சமீபத்திய நிகழ்வுகள்

தொகு

2006-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ரியாலிட்டி ஷோவான அமெரிக்காவின் நெக்ஸ்ட் டாப் மாடல், பருவம் 6, (America's Next Top Model, Season 6) போட்டியாளர்களை பெவிலியன் ஆப் தி செயிண்ட் (Pavilion of the Saint) ஓடுபாதையாகப் பயன்படுத்தி இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றது.

இது ஒரு மாதிரி தளமாக இருந்தது, இது நிகழ்ச்சியின் வரலாற்றில் மிகப்பெரியது. இப்பகுதியில், வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட இடமாக சான்பெட் கோட்டை மாதிரி இருந்தது.

செப்டம்பர் 29, 2009 அன்று, பண்டைய சயாமில் உள்ள பிரியா விகார் கோயிலின் (Preah Vihear Temple) முன்பகுதியில் மக்கள் ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணியின் (People's Alliance for Democracy) 500 ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

1962-ஆம் ஆண்டில் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) கோயில் கம்போடியாவைச் சேர்ந்தது என்று தீர்ப்பளித்த போதிலும் அந்தக் கோயில் தாய்லாந்தைச் சேர்ந்தது என்று அவர்கள் கூறினர்.

காலவரிசைப்படி கட்டிடக்கலை

தொகு

இந்தப் பண்டைய சயாம் வெவ்வேறு காலங்களில் இருந்து பல்வேறு குறிப்பிடத்தக்க கட்டடக்கலை சாதனைகளைக் காட்டுகிறது. .[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "HISTORICAL TIMELINE". Ancient City Group. பார்க்கப்பட்ட நாள் 2018-06-07.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_சயாம்&oldid=3525472" இலிருந்து மீள்விக்கப்பட்டது