பண்புசார் ஈர்ப்பு
புணர்ச்சி, உணர்ச்சி அல்லது காதல் வகையிலாக பாலின வேறுபாடின்றி ஒருவரின் பண்பை பார்த்து மட்டும் அவர் மீது ஈர்ப்பு கொள்வது பண்புசார் ஈர்ப்பு எனப்படும். பண்புசார் ஈர்ப்பு என்பது ஒருவகையான பாலியல் அடையாளம்.[1][2]
விளக்கம்
தொகுபாலின வேறுபாடு இன்றி ஒருவரின் பண்பினால் ஈர்க்கப்படுபவர்கள் பண்புசார் ஈர்தலர்கள் என்று அறியப்படுகின்றனர். இந்த பாலின அடையாளம் விலங்கீர்தலர், சவமீர்தலர், குழவியீர்தலர் ஆகியோரை உள்ளடக்காது.
ஆண்டுதோறும் 24 வது மே பாலின அடையாள சிறுபான்மையினர் நாளாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பண்புசார் ஈர்ப்பு குறித்த விழிப்புணர்வு பரப்பப்படுகிறது. [3]
தரவுகள்
தொகு2016 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த 2000 ஆட்களிடம் எடுக்கப்பட்ட ஆரிஸ் போல் என்கிற கணக்கெடுப்பின் படி, 18-30 வயதிலான சுமார் இரண்டு விழுக்காடு நபர்கள் தங்களை பண்புசார் ஈர்தலராக அடையாளப்படுத்தி உள்ளனர்.[4]
2017 இல் கனெட்டிகட் பல்கலைக்கழகம் நடத்த, 12000 பாலின அடையாள சிறுபான்மையினரிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், அவர்களுள் 13-17 வயதிலான 14 விழுக்காடு பேர் பண்புசார் ஈர்தலராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.[5]