பண்புப்பெயர்

தமிழ் மொழி பெயர்களை ஆறு வகைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது.[1] இவற்றில் ஒன்றான பண்புப்பெயர் ஒரு பொருளின் பண்பை உணர்த்தும் பெயர் ஆகும்.

தொல்காப்பியப் பார்வை

தொகு

பொருளின் தன்மை எத்தகையது என்று கூறும் பெயர்கள் பண்புப்பெயர்கள் ஆகும். பண்பானது நிறம், சுவை, அளவு, வடிவம், குணம் அல்லது பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிறக்கும்.[2]

சான்று:
வெண்சங்கு - வெண்மை + சங்கு -நிறப்பண்பைக் குறித்த பண்புப்பெயர்.
புளிக்குழம்பு - புளிப்பு + குழம்பு - சுவைப்பண்பைக் குறித்த பண்புப்பெயர்.
சதுரக்காகிதம் - சதுரம் + காகிதம் -வடிவப் பண்பைக் குறித்த பண்புப்பெயர்.
நீள்வானம் - நீளம் + வானம் - அளவுப் பண்பைக் குறித்த பண்புப்பெயர்.
இன்சொல் - இனிமை + சொல் - குணப் பண்பைக் குறித்த பண்புப்பெயர்.

நன்னூல் பார்வை

தொகு

செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை உண்மை நுண்மை
(இவற்றின் எதிர்ச்சொல்)
கருமை பெருமை அண்மை நன்மை குளுமை பழைமை வன்மை சிறுமை நொய்மை பொய்மை பருமை
ஆகியவை பண்பின் பகாப்பதம் என நன்னூல் குறிப்பிடுகிறது.[3]

பார்க்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. பொருட்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர்
  2. வண்ணத்தின், வடிவின், அளவின், சுவையின், என்று
    அன்ன பிறவும் அதன் குணம் நுதலி,
    'இன்னது இது' என வரூஉம் இயற்கை
    என்ன கிளவியும் பண்பின் தொகையே. (தொல்காப்பியம் 2-416)

  3. செம்மை சிறுமை சேய்மை தீமை
    வெம்மை புதுமை மென்மை மேன்மை
    திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர்
    இன்னவும் பண்பின் பகா நிலைப் பதமே (நன்னூல் 135)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்புப்பெயர்&oldid=2662799" இலிருந்து மீள்விக்கப்பட்டது