பொருட்பெயர்

இட்டு வழங்கப்பெறும் பெயர்ச்சொற்களை பொருட்பெயர் என்றழைப்பர். எல்லா மொழியிலக்கணங்களும் மொழியில் பயன்படும் சொற்களைப் பெயர் என்றும், வினை என்றும் பாகுபடுத்திக் கொள்கின்றன. தமிழில் பொருட்பெயர் என்பது பொருளைக் குறிக்கும் பெயர். பொருள் உருவமாகவோ, அருவமாகவோ இருக்கும். தமிழ் மொழி பெயர்களை ஆறு வகைகளாகப் பகுத்துக்கொண்டுள்ளது.[1]

பொருட்பெயர்

தொகு

ஒரு பொருளுக்கு பெயராகிவருவது பொருட்பெயர் ஆகும். இது உயர்திணைப் பொருட்பெயர், அஃறிணைப் பொருட்பெயர் என இரண்டு வகைப்படும்.

உயர்திணைப் பொருட்பெயர்

ஆண்பால் பொருட்பெயர், பெண்பால் பொருட்பெயர். சான்று: முத்து, பேச்சியப்பன், மலர்விழி, தேன்மொழி, அம்மன், பாண்டிமுனி, கருப்பசாமி.

அஃறிணைப் பொருட்பெயர்

இது இரண்டாகப் பகுக்கப்படும். அவை: உயிருள்ள அக்றிணைப் பொருட்பெயர், உயிரற்ற அக்றிணைப் பொருட்பெயர்.

உயிருள்ள அஃறிணைப் பொருட்பெயர்

ஒன்று முதல் ஐந்தறிவுள்ள அனைத்தின் பெயர்களும் உயிருள்ள அஃறிணைப் பொருட்பெயரில் அடங்கும் சான்று: புல், மீன், நாய், யானை.

உயிரற்ற அஃறிணைப் பொருட்பெயர்

இதில் உயிரற்ற இயற்கைப் பொருட்களும், உயிரற்றசெயற்கைப் பொருட்களின் பெயரும் அடங்கும். சான்று: நிலா, வான், மலை, நாற்காலி, கணினி, வண்டி

  • மாடு - உயிருள்ள பொருட்பெயர், கல் - உயிரில்லாப் பொருட்பெயர், காற்று - உருவமில்லாப் பொருட்பெயர்

பொருட் பெயரின் பண்புகள்

தொகு
  • வேற்றுமை உருபுகளைக் கொள்ளும்.
  • காலம் காட்டாது.
  • திணை, பால் பகுப்புகள் கொண்டது.

அடிக்குறிப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருட்பெயர்&oldid=3604717" இலிருந்து மீள்விக்கப்பட்டது