பதானி பட்நாயக்
பதானி பட்நாயக் (Pathani Pattnaik) (பிறப்பு 19 செப்டம்பர் 1928; இறப்பு 4 பிப்ரவரி 2017) [1] என்பவர் ஓர் ஒடிய மொழி இந்திய எழுத்தாளர் ஆவார். இவர் தனது சுயசரிதையான 'சிபனாரா சலபதே' விற்காக 2010 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.
சுயசரிதை
தொகுபட்நாயக் 1928 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் நாள் ஒடிசாவில் உள்ள குர்தா மாவட்டத்தில், கோலோபாய் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் தனது ஆரம்பப் பள்ளிப்படிப்பைத் தனது கிராமத்திலும், மெட்ரிகுலேசன் படிப்பை பூரி மாவட்டத்திலும் படித்தார். பின் ராவன்சா கல்லூரியில் தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். பட்நாயக் கிறிஸ்து கல்லூரியின் முதல்வராகவும், ஒடிசா சாகித்ய அகாதமியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2]
படைப்புகள்
தொகுகுழந்தைகள் இலக்கியம், புதினம், சிறுகதைகள் மற்றும் மொழியியல் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களில் 80க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.[3]
நூற்பட்டியல்
தொகு- சாகித்தியா ஓ சமசுகிருதி
- சாகித்தியா மனிசா
- சாகித்தியா பரிகிரமா
- ஒடியா உபன்யாச சாகித்தியரா பரிச்சயா
- பிரபந்தா ஓ சமலோச்சனா
- சமசா ஓ சாகித்தியா
- சாகித்தியா ஓ சமிக்சா
மரியாதை
தொகுபட்நாயக் தனது சுயசரிதையான 'சிபனாரா சலபதே' க்காக 2010 இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.[3] மேலும் இவர் 1993இல் ஒடியா சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.[2]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Pathani Patnaik passes away". The New Indian Express. 2017-02-05. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 2.0 2.1 "Meet The Author: Pathani Patnaik" (PDF). New Delhi: Sahitya Akademi. 25 February 2011.
- ↑ 3.0 3.1 Feb 4, Binita Jaiswal / TNN /; 2017; Ist, 21:49. "Pathani Patnaik: Noted academician Pathani Patnaik passes away | Cuttack News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)