பதார்க்கா
பதார்க்கா (Badarkha) இந்தியாவின் குசராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமமும் குடியிருப்பு பகுதியும் ஆகும்[1]. இக்கிராமத்தின் மக்கள் தொகை 10,000 நபர்களுக்கும் அதிகமாக உள்ளது. அகமதாபாத்-தோல்கா நெடுஞ்சாலையில், இக்கிராமம் தோல்காவிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அகமதாபாத்திலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் போக்குவரத்து வசதிக்காக இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. விவசாயமும், வீட்டு விலங்குகள் பராமரிப்பும் பதார்க்கா கிராமத்தில் முக்கியத் தொழில்களாக உள்ளன. மக்களில் சிலர் அரசுப் பணியில் பணிபுரிபவர்களாக உள்ளனர்.
பதார்க்கா Badarkha | |
---|---|
குடியிருப்புப்பகுதி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத் |
மாவட்டம் | அகமதாபாத் |
அரசு | |
• நிர்வாகம் | பதார்க்கா கிராமப்பஞ்சாயத்து |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 382270 |
தொலைபேசிக் குறியீடு | 91-2714 |
வாகனப் பதிவு | GJ |
மக்களவை தொகுதி | கேதா |
மாநில சட்டப்பேரவை | தோல்கா |
இணையதளம் | gujaratindia |