பதிபசுபாசப் பனுவல் உரை

பதிபசுபாசப் பனுவல் உரை [1] என்னும் உரைநூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான தேசிகரால் எழுதப்பட்டது. மறைஞான தேசிகரின் ஆசிரியர் மறைஞான சம்பந்தர். மறைஞான சம்பந்தர் பதிபசுபாசப் பனுவல் என்னும் நூலை எழுதினார். ஆசிரியர் எழுதிய இந்த நூலுக்கு அவரது மாணாக்கர் எழுதிய உரைநூலே இந்த உரைநூல். இந்த உரைநூல் கிடைக்கவில்லை. எனினும் இவர் எழுதிய சிவஞான சித்தியார் உரையில் தாம் செய்துள்ளதாக இந்த உரைநூலைக் குறிப்பிட்டுள்ளார்.

பரமததிமிர பானு [2] என்னும் நூல் இவரால் செய்யப்பட்டதாகச் சொல்லுகின்றர்.[3] இது பிழை. இந்த நூலைச் செய்தவர் இவரது ஆசிரியர் மறைஞான சம்பந்தர்.[4]

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 32. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. பர மத திமிர பானு
  3. சண்முகசுந்தர முதலியார் சொல்கிறார்
  4. மு. அருணாசலம் அறுதியிட்டுக் கூறுகிறார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிபசுபாசப்_பனுவல்_உரை&oldid=2757243" இலிருந்து மீள்விக்கப்பட்டது